Skip to main content

Doctor Vikatan: கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர்... சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா?

Doctor Vikatan: கொய்யா இலை சூப் மற்றும் தேநீர் குடித்தால் சர்க்கரை நோய் குறையும், குணமாகும் என்று சிலர் கூறுகிறார்கள். சில கடைகளில் கொய்யா இலைப் பொடியைக்கூட விற்பனை செய்கிறார்கள். உண்மையாகவே கொய்யா இலைக்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டா... அது உண்மை என்றால், கொய்யா இலையை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்?  
-Jay, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சர்க்கரை நோயாளிகள் அனைவரும் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரைநோய் வந்துவிட்டால், மறுபடி அதை இல்லாமல் செய்வதோ, முழுமையாக குணப்படுத்துவதோ சாத்தியமில்லை. எந்த மருந்தாலும் அதைச் செய்ய முடியாது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும்தான் சாத்தியம். 

கொய்யா இலையைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஒரு மூலிகைக் குடிநீராக எடுத்துக்கொள்வதில் சில நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. 

இதில் உள்ள துவர்ப்புச் சுவை மற்றும் 'பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்' (Phytonutrients) காரணமாக சில மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மருத்துவ குணங்கள் இருப்பதாலேயே இதனை சர்க்கரை நோய்க்கான ஒரு முழுமையான மருந்தாகக் கருதி, எடுத்துக்கொள்வது தவறானது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், அன்றாடம் ஆவாரை குடிநீர், மருதம்பட்டை குடிநீர் அல்லது மூலிகை டீ சூப் போன்றவை குடிப்பதைப் போல இதையும் ஒரு துணைப் பொருளாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, இது மட்டுமே சர்க்கரைநோய்க்கான  முழுமையான மருந்தாகாது.

மருத்துவ குணங்கள் இருப்பதாலேயே இதனை சர்க்கரை நோய்க்கான ஒரு முழுமையான மருந்தாகக் கருதி, எடுத்துக்கொள்வது தவறானது.

கொய்யா இலையில் உள்ள துவர்ப்புத் தன்மை காரணமாக சர்க்கரையின் அளவு ஓரளவுக்குக் குறைய வாய்ப்புள்ளதே தவிர, இது நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என்று சொல்ல முடியாது.

எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய  உணவுப் பொருள்களில் ஒன்றாக மட்டுமே பார்க்க வேண்டும். மற்றபடி, யாராவது இதை மட்டும் குடித்தால் போதும், சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்று சொன்னால், அது  தவறான வழிகாட்டுதலாகவே இருக்கும். கொய்யா இலைக் குடிநீர் என்றில்லை, இதுபோன்ற மருத்துவ அறிவுரைகளை மருத்துவர் அல்லாதவர்கள் உங்களுக்குச் சொல்லும்போது, அவற்றை அப்படியே நம்பிப் பின்பற்ற வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...