கடந்தாண்டு தமிழகத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.
அந்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது.
அதாவது தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
1,00,097 பேரில் பெண்கள் 53, 542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பெண்கள் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் ஆண்கள் அதிகபட்சமாக வாய்ப் புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments
Post a Comment