Skip to main content

Posts

``பீர்க்கங்காயும் அதன் தோலும்'' - மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!

''பார்க்க கரடு முரடாக இருந்தாலும் சுவையிலும், அது தரும் ஆரோக்கியத்திலும் பீர்க்கங்காயை அடித்துக்கொள்ள முடியாது. நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இதை வாரத்தில் மூன்று நாள்கூட சாப்பிடலாம். பீர்க்கங்காயின் தோலில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அதையும் தவிர்க்க வேண்டாம். அது துவர்ப்புத் தன்மை நிறைந்தது என்பதால், சமையலில் அப்படியே பயன்படுத்த முடியாது. துவையலாக செய்து சாப்பிடலாம்'' என்கிற டயட்டீஷியன் அம்பிகா சேகர், பீர்க்கங்காயின் மருத்துவ குணங்களையும், அதன் தோலை எப்படி துவையல் செய்வது என்பதையும் விளக்குகிறார். பீர்க்கங்காய் பலன்கள்: • பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், இதய பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட மிகவும் நல்லது. தவிர, உடலில் தாது உப்புக்களின் சமநிலையின்மை ஏற்படாமல் தடுத்து, உடலை தேவையான நீர்ச்சத்துடன் பராமரிக்கும். • இதிலுள்ள வைட்டமின் பி, சி செரிமானத்தை எளிதாக்கும். • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பீர்க்கங்காய் மிகவும் நல்லது. காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, ...

Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்தால், மார்பகங்கள் தளர்ந்து போகுமா?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே மார்பகங்கள் பருத்துக் காணப்படும். உடல் பருமன் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். எடையைக் குறைத்தால் மார்பகங்கள் தளர்ந்துபோகும் என்பது உண்மையா? அதனால் என் தோற்றமே மாறிப்போகுமா? தளர்ச்சியைச் சரியாக்க அறுவை சிகிச்சைதான் தீர்வா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த,   ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்   ஷீபா தேவராஜ் எடைக்குறைப்பு என்பது ஒட்டுமொத்த உடல் சம்பந்தப்பட்டது. உடலில் எங்கெல்லாம் கொழுப்பு இருக்கிறதோ, எடையைக் குறைக்கும்போது அங்கெல்லாம் கொழுப்பு குறைவது இயல்பு. மார்பகங்களும் அப்படித்தான். மார்பகங்கள் என்பவை சதைப்பகுதிகளால் ஆனவை. எனவே நீங்கள் சரியான பயிற்சிகளைச் செய்து, கொழுப்பைக் குறைக்கும்போது அவற்றின் அளவும் குறையும். மார்பக அளவுகளைக் குறைக்கவோ, கூட்டவோ என பிரத்யேகப் பயிற்சி எதுவும் இல்லை. தளர்ந்துபோன மார்பகத் தசைகளை எடை நிர்வாகத்தின் மூலம் ஓரளவு சரிசெய்யலாம். முதல் வேலையாக சரியான நிபுணரின் வழிகாட்டுதலோடு எடையைக் குறைத்து, பாஸ்ச்சரை சரிசெய்து, உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றத் தொடங்கினாலே உடலளவில் உறுதியாக உணர்வீர...

Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத் தருமா?

Doctor Vikatan: சித்த மருந்துகள்  தயாரிப்பில்  உலோகங்கள் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை. இப்படி உலோகங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் எந்த அளவுக்கு உடலுக்குப் பாதுகாப்பானவை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சித்த மருந்துகளைப் பொறுத்தவரை பல விஷயங்களில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படும். அப்படிப் பார்த்தால் அடிப்படையில், மூலிகைகள், அடுத்து  தாதுப்பொருள்கள் என்று சொல்லக்கூடிய உலோகங்கள், பிறகு விலங்கினங்களிடம் இருந்து பெறப்படும் பொருள்கள் என எல்லாவற்றிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுவதுண்டு. சித்த மருந்துகளைப் பொறுத்தவரை மூலிகைகள்தான் அடிப்படை.  'வேர்ப்பாரு தழைப்பாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரு' என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு.  அதாவது முதலில் மூலிகைகளை முயற்சி செய்து பாருங்கள்... அவற்றில் பலன் கிடைக்காதபோது உலோகங்களை முயற்சி செய்து பாருங்கள் என்பது இதன் அர்த்தம். சித்த மருந்துகளில் உலோகங்...

பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்

மாதவிடாய் நாள்களின் அவதிகள் அதிகரிக்க, அந்த நாள்களில் உண்ணும் சில உணவுகளும் காரணமாகலாம். வலியிலிருந்து விடுபட, தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ. Periods pain Vs fatty foods கொழுப்பு உணவுகள். உடலில் வாயு உற்பத்தியை அதிகரிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, மன அழுத்தம் அதிகரிக்கலாம். அடிவயிற்றில் வலியை ஏற்படுத்துவதுடன், வயிற்றுப்போக்கையும் உண்டாக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள். உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள். உடலில் வாயு உற்பத்தியை அதிகரிப்பதுடன், மாதவிடாய்க்கால வலியையும் தீவிரமாக்கும். Periods pain Vs Salty foods மசாலா உணவுகள். வறுத்த, அதிக மசாலா சேர்த்த உணவுகள் அழற்சிப் பிரச்னையை அதிகப்படுத்தும். மாதவிடாய்க்கால வலியைத் தீவிரமாக்கும். சர்க்கரை உணவுகள். உடலில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால், மனநலனில் மாற்றங்கள் ஏற்படும். பதற்றம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி சமச்சீரற்று இருக்கும். Periods pain Vs Coffee காபி. இதிலுள்ள கஃபைன், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத்துடிப்பின் இயல்பு மாறலாம். பதற்றமும் அடிவயிற்றுப...