க னவு காணாத மனிதர்களே இல்லை. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் ராமன். தூக்கம் கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், சிந்தனைகள் நிலவுகின்றன. கனவுகள் ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு. நாம் தூங்கும்போது, `ரெம்’ (Rapid eye movement - REM) எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், உடலின் அனைத்துப் பகுதிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து, முழுமையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை! எவை கனவாகின்றன? கனவு உருவாக்கம் என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. கனவுகள் உருவாகும் விதம் ஒவ்வொருவர...