பக்கவாதத்தால் பேச்சின்றி முடங்கிப் போயிருந்த ஒரு பெண்ணுக்கு, அவரது மூளையிடம் இருந்து சிக்னல் பெற்று, அவர் பேச நினைத்ததை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் வார்த்தைகளாக்கி உதவ ம் மருத்துவத்துறையில் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 47 வயதான ஆன் (Ann) 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத கடினமான சூழல் உருவானது. இந்நிலையில் தற்போது ஏ.ஐ. மூலம் மோஷன் - ட்ராக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிமிடத்திற்கு 14 வார்த்தைகள் வரை மெதுவாகப் பேசி வருகிறார். மருத்துவத்துறையில் இது பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது. பக்கவாதம்! இப்பணியை மேற்கொண்ட ஆராய்ச்சிக்குழுவானது, அவரின் மூளையின் மேற்பரப்பில், 253 மெல்லிய காகித மின்முனைகளைப் பொருத்தியது. இதன் மூலம் இவரின் தனித்துவமான பேச்சு ஒலிகளின் வடிவங்களை, மூளை சமிக்ஞைகளாக வெளிப்படுத்தும். இதனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஏ.ஐ. அல்காரிதம் தொழில் நுட்பத்திற்கு, உரிய பயிற்சி தரப்பட்டுள்ளது. எனவே, இவரின் தனித்துவமான 39 ஒலிகள், சமிஞ்சைகளை சாட் ஜிபிடி பாணியில் கம்ப்யூட்டரானது மொழி ...