மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் தொடரும் இரண்டு குழுவுக்கு மத்தியிலான கலவரம், இந்தியாவைப் பெரும் சஞ்சலத்துக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக மே 4-ம் தேதி இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் குடும்பத்தாரையும் கொலைசெய்த பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறது. அது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையான பிறகு, அதாவது ஏறத்தாழ 76 நாள்களுக்குப் பிறகு சில குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறது.I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது, கடந்த சில மாதங்களாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாவதற்குக் காரணமான மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி 15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நோட்டீஸ் அளித்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, குறுகிய கால விவாதம் நடத்தும் விதி 176-ன்கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள், சபையின் அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து மட்டும...