Skip to main content

``புலியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக்கொண்டதுபோல எதிர்க்கட்சிகள் கூட்டணி" - அண்ணாமலை சாடல்

தி.மு.க அரசு ஆட்சி அமைத்து 27 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், காரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.அண்ணாமலை - முதல்வர் ஸ்டாலின் அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகம் முழுவதும் லஞ்சம், விலைவாசி உயர்வு, கனிமவளக் கொள்ளை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை, டாஸ்மாக் முறைப்படுத்தாமை, மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் வாய்திறக்காதது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியில் மீதமிருக்கும் நாள்களில் இவற்றைச் சரிசெய்வார்கள் என நம்புகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மின் கட்டணம் 3 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியை எதிர்ப்பது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் முக்கியப் பணியாக இருக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த முதல்வர் திடீரென விழித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் முடிந்து 210 நாள்கள் கடந்திருக்கின்றன. இன்னும் அதில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தொண்டரைக் காலில் விழவைத்திருக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர். எனவே, மணிப்பூர் விவகாரத்தில் முதல்வர் அரசியல்வாதியாகச் செயல்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.முதல்வர் ஸ்டாலின் மணிப்பூரில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசு சேர்ந்து சரி செய்வார்கள். இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட செய்தி பாதைபதைப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாகவும் மணிப்பூர் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை 6 பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். மணிப்பூரின் கடந்த காலம்கூட எப்போதும் கொந்தளிப்பானதுதான். 2014-க்குப் பிறகுதான் அமைதியை நோக்கி மணிப்பூர் நகர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பால் தற்போது அங்கே கலவரம் வெடித்திருக்கிறது. எனவே முதல்வர் முழு நேர அரசியல்வாதியாகத்தான் மணிப்பூர் விவகாரத்தில் செயல்படுகிறார். கெலோ இந்தியாவை ஆரம்பித்த மத்திய அரசுக்கு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு எப்படி பயிற்சியளிக்க வேண்டும் என்பது தெரியும். எனவே மணிப்பூர் விவகாரத்துக்குச் செல்லாமல், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெற்றுத்தரும் வழியை முதல்வர் செய்யலாம். தமிழகம் தேசவிரோதிகளின் புகழிடமாக மாறியிருக்கிறது. தொடந்து என்.ஐ.ஏ சோதனை நடந்துவருகிறது.மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக் கொடுமை காவல்துறையின் கை கட்டப்பட்டிருப்பதால் தமிழகம் தேசவிரோதிகளின் புகழிடமாகிவருகிறது. தெலங்கானா, கேரளா, தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அந்தந்த மாநில மக்களிடம் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவர் எங்கு போட்டியிடுவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியா என்று சொல்லும்போது உள்ளத்தில், உணர்வில், ரத்தத்தில், நாடி நரம்புகளில் `இந்தியன்' என்ற உணர்விருக்க வேண்டும். தி.மு.க பிரிவினைவாதக் கட்சி. காஷ்மீரின் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா போன்றோர் இந்தியாவுடன் சேரமாட்டோம் என்ற கருத்தால் 370 நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓர் அறையில் அமர்ந்து தங்கள் கூட்டணிக்கு `இந்தியா' எனப் பெயர் வைத்துக்கொண்டால் அதை மக்கள் எப்படி ஏற்பார்கள். புலியைப் பார்த்து நாய் சூடுபோட்டுக்கொண்டதுபோல எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு `இந்தியா' எனப் பெயர் வைத்திருக்கின்றன.எதிர்க்கட்சிகள் கூட்டம் எங்கள் கூட்டணியான என்.டி.ஏ-வில் பா.ஜ.க-வின் முதல்வர்கள் பங்கெடுத்தார்கள். மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று பிரதமர் மோடி தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்கவே நடைப்பயணம்" எனத் தெரிவித்தார்.அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை இல்லை... பாவயாத்திரை! - காயத்ரி ரகுராம் ‘கலாய்’
http://dlvr.it/SsdV8p

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...