``தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்னைகள்; முதல்வருக்கோ, மகனின் `கலகத் தலைவன்' பற்றி கவலை!"- பாஜக இப்ராஹிம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் (25-ம் தேதி) திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அந்த அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-மீது வைப்பது இரண்டே இரண்டு குற்றச்சாட்டுகளைத்தான். ஒன்று... பா.ஜ.க வட மாநில கட்சி, இந்திக்கு ஆதரவளிக்கும் கட்சி, தமிழர் விரோத கட்சி என்ற இனவாத மொழிவாத விஷயங்களை இங்கிருக்கக் கூடிய 'திராவிட மாடல்' எனும் திருட்டு மாடலை நடத்தக்கூடிய தி.மு.க உட்பட்ட அதன் கூட்டணி கட்சிகள் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கு பிரயோகிக்கும் குற்றச்சாட்டுகள். வேலூர் இப்ராஹிம் இரண்டாவது, பா.ஜ.க இந்துத்துவா சித்தாந்த கட்சி, இஸ்லாமிய கிறிஸ்தவர்களை எதிர்க்கக்கூடிய கட்சி, இந்த மக்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய கட்சி, இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் சிறுபான்மையினர் நாடு கடத்தப்படுவார்கள் போன்ற அச்சத்தை விதைக்கிறார்கள். முதல் குற்றச்சாட்டுக்கு எதிராக பா.ஜ.க நிர்வாகிகள், மாநில தலைவர் உட்பட அனைவரும் கடுமையாக உழைத்...