எனக்கு பல வருடங்களாக பல் கூச்சம் இருக்கிறது. இதனால் பல் கூச்சத்துக்கான பேஸ்ட் பயன்படுத்துகிறேன். பல் கூச்சத்துக்கு என்ன காரணம்? அதற்கான பேஸ்ட்டை தினமும் பயன்படுத்துவது சரியானதா? பல் மருத்துவர் மரியம் சஃபி பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பொதுவாக பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்துபோய், அதையடுத்த `டென்ட்டின்' லேயர்( Dentin) எக்ஸ்போஸ் ஆவதால்தான் பற்களில் கூச்ச உணர்வு ஏற்படும். பற்களில் கூச்சம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமானது தவறான பிரஷ்ஷிங் முறை. அதாவது சரியான முறையில் பல் துலக்காதது. பல் துலக்கும்போது ரொம்பவும் அழுத்தியோ, கடினமாகவோ தேய்ப்பது, தவறான திசைகளில் தேய்ப்பது, தவறான பிரஷ் உபயோகிப்பது போன்றவற்றால் எனாமல் தேய்ந்து போகும் வாய்ப்புகள் அதிகமாகும். Tooth brush பல் துலக்குதல்... கவனிக்கவேண்டிய விஷயங்கள் அதனால் உள்ளே உள்ள டென்ட்டின் லேயர் எக்ஸ்போஸ் ஆகும். அதன் விளைவாகவும் பல் கூச்சம் அதிகரிக்கும். அடுத்தபடியாக உங்களுக்கு ஈறுகளில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் வேர்கள் வெளியே எக...