Skip to main content

Doctor Vikatan: டீன் ஏஜிலேயே எட்டிப் பார்க்கும் நரைமுடிகள்... ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: இந்தக் காலத்தில் டீன் ஏஜிலேயே பல பிள்ளைகளுக்கும் நரை முடிகள் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். இது இளநரை என்றும் ரிவர்ஸ் செய்துவிடலாம் என்றும் சொல்கிறார்களே....

டீன் ஏஜில் ஏற்படுகிற நரை முடிப் பிரச்னைக்கு என்ன காரணம்.... இதை உணவு, இயற்கை வழிகளில் சரி செய்ய முடியுமா?  

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை  மருத்துவர் தலத் சலீம்.

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

ஹேர் ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் நுண்ணறைகளில் உள்ள மெலனோசைட்ஸ் எனும் செல்கள் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்கின்றன. இவைதான் நம் கூந்தலுக்கு கருமை நிறத்தைக் கொடுக்கின்றன. மெலனோசைட்ஸ் செல்கள் மெலனின் உற்பத்தி செய்வதைக் குறைக்கும்போது கூந்தல் நரைக்கத் தொடங்கும்.

மெலனின் உற்பத்தி குறையக் கீழ்க்காணும் விஷயங்கள் காரணமாகலாம். நரை முடி வந்துவிட்டால், அதை ரிவர்ஸ் செய்ய முடியாது. ஆனால், அதிகரிக்காமல் தடுக்கலாம். அதற்கு வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் உணவியலில் கவனம் செலுத்த வேண்டும்.

வைட்டமின் பி12, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, அயோடின் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துகள் குறைவாக இருப்பது.

மன அழுத்தம் அதிகரிக்கும்போது கூந்தலுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைப்பது குறைந்து, முடி நரைக்கத் தொடங்குகிறது.

குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதில் நரை இருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தைராய்டு பாதிப்பு

ஃபேஷன் என்ற பெயரில் இளம் வயதிலேயே கூந்தலுக்கு கலரிங் செய்வது, இளநரையை ஏற்படுத்தலாம். ஹேர் கலர்களில் உள்ள ரசாயனங்கள் முடியைப் பலவீனமாக்கி, நரையை ஏற்படுத்தும்

அதிக நேரம் வெயிலில் இருப்பது கூந்தலை நிறமிழக்கச் செய்யலாம். சருமத்துக்கு சன்ஸ்கிரீன் உபயோகிப்பது மாதிரி, வெயிலில் போகும்போது தலைக்கு தொப்பி, ஸ்கார்ஃப் அணிய வேண்டும்.

போதுமான தூக்கம் இல்லாததால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, கூந்தல் வலுவிழந்து, நிறம் மாறுகிறது.

கறிவேப்பிலை பயன்கள்
கறிவேப்பிலை மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

இளவயதிலேயே உணவு விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தினால், இப்படி நரை முடி அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.  ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் கொதிக்கவிட்டு வடிகட்டி, அந்த நீரை வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு கப் குடித்து வந்தால், இளநரையைத் தவிர்க்கலாம்.

கறிவேப்பிலை மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டு ஈரல் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தள்ளிப்போகும். ஈரலில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. 

சிறிதளவு தயிரில் ஒரு டீஸ்பூன் ஈஸ்ட்டை கலந்து, தினமும் காலை உணவுக்கு முன்பு குடித்து வந்தால் இளநரை தடுக்கப்படும். வைட்டமின் ஹெச் நிறைந்த முட்டை, சீஸ், வெங்காயம், வெள்ளரி, பாதாம் போன்றவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...