Skip to main content

Doctor Vikatan: பிசிஓடி பிரச்னை இருந்தால் குழந்தை பிறக்காதா... நிரந்தர தீர்வே கிடையாதா?!

Doctor Vikatan: பிசிஓடி பிரச்னைக்குத் தீர்வே இல்லை என்று சொல்கிறார்களே, அது உண்மையா...  பிசிஓடி இருந்தால் குழந்தை பிறக்காது என்ற தகவலும் உண்மையா... மருந்து, மாத்திரைகள் இல்லாமல், இந்தப் பிரச்னைக்கு வேறு தீர்வுகள் உண்டா.... பிசிஓடி வர என்ன காரணம்... இதற்கும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மைக்கும் என்ன தொடர்பு... எனக்கு பிசிஓடி இருந்தால் என் குழந்தைக்கும் அந்த பாதிப்பு வருமா?

-Sushmi, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பிசிஓடி பாதிப்பு என்பது பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி ஆயுள் தண்டனை எல்லாம் இல்லை. அந்த பாதிப்பு இருந்தால் குழந்தையே பிறக்காது, குணப்படுத்தவே முடியாது என்பதை எல்லாம் அப்படியே 100 சதவிகிதம் நம்பத் தேவையில்லை. அது வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை தொடர்பான பிரச்னைதான். பிசிஓடி பாதிப்பை  'பாலிஎண்டோக்ரைன் மெட்டபாலிக் ஓவரியன் சிண்ட்ரோம்' (Polyendocrine Metabolic Ovarian syndrome- PMOS) என்ற புதிய பெயரில் குறிப்பிடுகிறது மருத்துவ உலகம்.

பிசிஓடி பாதிப்பை பெரும்பாலும் வாழ்வியல் முறை மாற்றங்கள் மற்றும் உணவியல் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியும். பிசிஓடி பாதிப்புள்ள பெண்களால் இயற்கையாகக் கருத்தரிக்கவும், ஆரோக்கியமான குழந்தை பெறவும் முடியும். பிசிஓடி பாதிப்பில் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நடப்பதில்லை அல்லது தாமதமாக நடக்கிறது. வாழ்வியல் முறை மாற்றங்கள், உடல் எடையைச் சரியாக வைத்திருப்பது, இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைப்பது, தினமும் இரவில் 7- 8 மணி நேரம் தூங்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் அண்டவிடுப்பு என்பது இயல்பாக நடக்கும்.

தினமும் இரவில் 7- 8 மணி நேரம் தூங்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் அண்டவிடுப்பு என்பது இயல்பாக நடக்கும்.

குறிப்பாக, உடல் எடையில் 5 சதவிகிதத்தைக் குறைத்தால்கூட, பிசிஓடி பாதிப்புள்ளவர்களுக்கு இயற்கையான அண்டவிடுப்பு நிகழும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் பிறகு இயற்கையாக கருத்தரித்தலும் நிகழும்.

இன்சுலின் என்ற ஹார்மோன், நம் உடலில் உள்ள குளூக்கோஸை பேலன்ஸ் செய்வதற்காகச் சுரக்கிறது. இன்சுலின் சுரக்கும்போது நம் ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவு நார்மலாகிறது. சர்க்கரைச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, நம் உடலில் இன்சுலின் அதிகம் சுரக்கும். ஒரு கட்டத்தில் எவ்வளவு இன்சுலின் சுரந்தாலும் ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை கட்டுப்படுத்தும் தன்மை குறையும்.

இதைத்தான் 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' ( insulin resistance ) என்று சொல்கிறோம். இதில் இன்சுலின் சரியாக வேலை செய்ய முடியாததால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்பட்டு, இன்சுலின் அதிகமாகச் சுரந்துகொண்டே போகும். இதை 'ஹைப்பர் இன்சுலினீமியா' (Hyperinsulinemia ) என்று சொல்கிறோம். இன்சுலின் அதிகம் சுரக்கும்போது, அது சினைப்பைகளைத் தூண்டி, ஆண் ஹார்மோன்களான ஆண்ட்ரோஜென்களை அதிகம் உற்பத்தி செய்ய வைக்கிறது. 

இதனால்தான் பீரியட்ஸ் சுழற்சி முறை தவறுவது, முகத்தில் பரு, முகத்தில் ரோம வளர்ச்சி, உடல் எடை அதிகரிப்பது, அண்டவிடுப்பு நிகழாமல் போவது போன்றவை எல்லாம் ஏற்படுகின்றன.

பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் என்பது மகப்பேறு தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. நம் உணவுமுறை, உடல் எடை, ஸ்ட்ரெஸ் அளவு, தூக்கம் என எல்லாவற்றையும் பொறுத்தது. பிசிஓடி பாதிப்பானது பரம்பரையாகவும் பாதிக்கலாம். ஆனால், அது அப்படி பாதித்தே தீர வேண்டும் என்ற கட்டாயமில்லை. உங்கள் அம்மா, அக்கா போன்றோருக்கு அந்த ஜீன் இருந்தாலும், அது உங்களை பாதிக்காமலிருக்க வாழ்வியல் மாற்றங்கள் உதவும்.

மருந்துகள் எடுப்பதன் மூலம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை பாதிப்பைக் குறைக்கலாம். பீரியட்ஸை ஒழுங்குபடுத்தலாம்.

பேலன்ஸ்டு உணவுகளைச் சாப்பிடுவது, அதிக இனிப்புள்ள மற்றும் பதப்படுத்திய உணவுகளைத் தவிர்ப்பது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது, உடலியக்கம், உடற்பயிற்சி செய்வது போன்றவை அதற்கு உதவும். அதே போல உங்களுக்கு பிசிஓடி இருந்தால் உங்கள் குழந்தைக்கும் கட்டாயம் வர வேண்டும் என அவசியமில்லை. மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றி அவர்களும் அதிலிருந்து விலகி இருக்கலாம்.

மருந்துகள் எடுப்பதன் மூலம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை பாதிப்பைக் குறைக்கலாம். பீரியட்ஸை ஒழுங்குபடுத்தலாம். மருந்துகள் என்பவை தற்காலிக தீர்வுதான். மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்கள் மட்டும்தான் நிரந்தர தீர்வு. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...