Skip to main content

Doctor Vikatan: கோடைக்காலத்தில் கர்ப்பம் கூடாதா, ஐவிஎஃப் சிகிச்சை செய்யக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை.  உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு இப்போதுதான் ஐவிஎஃப் சிகிச்சைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறாள். இந்நிலையில் கோடைக்காலத்தில் ஐவிஎஃப் சிகிச்சை செய்ய வேண்டாம் என மருத்துவர் ஒருவர் அவளுக்கு அறிவுறுத்தியதாகச் சொல்கிறாள். இது உண்மையா... அதே போல கோடைக்காலத்தில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடும்படியும், ஆடி மாதத்தில் தம்பதியரைப் பிரித்து வைக்கவும் அதுதான் காரணம் என்றும் காலங்காலமாகச் சொல்லப்படுவது சரியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பாலியல் சிகிச்சை மருத்துவர் காமராஜ்.

பாலியல் மருத்துவர் காமராஜ்

கோடைக்காலத்தில் பொதுவாக அதிகம் ஐவிஎஃப் செய்ய மாட்டார்கள். அதில் வெற்றிவிகிதம் குறைவு. ஜனவரி, பிப்ரவரி போன்ற குளிர் காலங்களிலேயே நிறைய ஐவிஎஃப் சிகிச்சைகள் நடக்கும். இதுதான் இன்றைய நிலைமை. ஐவிஎஃப் சராசரியாக கடந்த 30 ஆண்டுகளாகத்தான் செய்யப்பட்டு வருகிறது.  புதிய ஆய்வுகள் நடக்கும்பட்சத்தில் என்னவிதமான தரவுகள் எப்படி வரும் என்பதைப்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோடைக்காலத்தில் குழந்தை பிறந்தால், அதிக வெயில் காரணமாக தாயும், சேயும் அவதிப்படுவார்களே என்ற கோணத்தில் இதுபோல் ஆடி மாதம் பிரித்து வைத்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு பெரும்பாலான தனியார் நர்ஸிங் ஹோம்களில் ஏசி வசதி உள்ளது. அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகளிலும் ஏசி வசதி வந்துவிட்டது. குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்கிறார்கள். வீடுகளிலும் பரவலாக ஏசி வசதி இருக்கிறது. எனவே, கோடைக்கால வெப்பத்தில் தாயும் சேயும் அந்தளவு அவதிப்படும் சூழல் இன்று இல்லை. அதனால் ஆடி மாதத்தில் தம்பதியரைப் பிரித்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

குழந்தையின்மை பரிசோதனைக்குச் செல்லும்போது வைட்டமின் டி 3 சோதனையைக் கண்டிப்பாகச் செய்வார்கள். தாம்பத்திய குறைபாடு கொண்டவர்களுக்கும் வைட்டமின் டி 3 சோதனை செய்வார்கள். கருமுட்டை வளர்ச்சி உள்ளிட்ட பல ஆரோக்கிய நடவடிக்கைகள், நோய்களுக்குப் பின்னால் வைட்டமின் டி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன் என பல விஷயங்களில் வைட்டமின் டி பாதிப்பு இருக்கிறது. வைட்டமின் டி அளவை சீராக வைத்துக் கொள்வதால் நம் ஆயுளையே அதிகரிக்க முடியும்.

கோடைக்கால வெப்பத்தில் தாயும் சேயும் அந்தளவு அவதிப்படும் சூழல் இன்று இல்லை.

சூரிய ஒளியின் காரணமாக வைட்டமின் டி நன்கு சுரக்கும். அதன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் அதிகம் சுரக்கிறது என்று ஆஸ்திரியாவில் நடந்த ஆய்வு ஒன்றில் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் அதிக முறை தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்கள், அதிக கர்ப்பம் தரிக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சம்மரில் செரட்டோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன் அதிகம் சுரக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.  அது தாம்பத்திய உறவுக்கும் உதவும் என்பதுதான் உண்மை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...