Skip to main content

Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?

Doctor Vikatan: இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்...

உண்மையிலேயே, வானிலைக்கும் உடல்நலத்துக்கும் தொடர்பு உண்டா... முன் எச்சரிக்கையாக இதைத் தடுக்க ஏதேனும் சுய மருத்துவம் செய்ய முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

வெப்பம் அதிகரிக்கும் போது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறாக, குளிர்ச்சியான சூழல், வைரஸ்கள் நீண்ட நேரம் உயிர்வாழவும், காற்றில் எளிதாகப் பரவி நோய்களை உருவாக்கவும் சாதகமாக அமைகிறது.

மழைக்காலமாக இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து குளிர்ச்சியாகவோ அல்லது மழை பெய்வது போன்ற தட்பவெப்பநிலை இருந்தாலோ, காற்றில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி அவை நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்களை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, கோடை விடுமுறை நாள்களில் பெற்றோர் சந்திக்கும் ஸ்ட்ரெஸ்ஸைச் சொல்லலாம். 

கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் தாமதமாகத் தூங்கி, தாமதமாக எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பெற்றோர்கள் அல்லது முதியவர்களுக்கு அப்படியோர் ஓய்வு கிடைப்பதில்லை.

விடுமுறை நாள்களில் பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்துவது, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்காகத் திட்டமிடுதல், டிக்கெட் முன்பதிவு செய்தல் என அவர்களுக்கு வழக்கத்தைவிட வேலைகள் அதிகரிக்கின்றன. அதனால் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த மன அழுத்தமும் நோய்கள் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்து மற்றவர்களுக்கும் பரவுகிறது என்றால், குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்து மற்றவர்களுக்கும் பரவுகிறது என்றால், குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் (Mask) அணிந்துகொள்வது மற்றும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

ஒவ்வோர் ஆண்டும் வைரஸ் கிருமிகளுக்கான இன்ஃப்ளூயன்ஸா (Flu vaccine) தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும்.

காய்ச்சல் அல்லது வைரஸ் பாதிப்பு இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி மிதமான சுடுநீர் குடிப்பது அவசியம்.

உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7-8 மணிநேர ஆழ்ந்த உறக்கம் தேவை. நோயற்ற வாழ்க்கைக்கு அதுவும் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...