Skip to main content

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார்.

மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன்.

மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

 சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

பழங்காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வரும் மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத  ஆரோக்கியமான நடைமுறையாகவே தொடர்கிறது.

இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், எந்தவிதக் கலப்படமும் இல்லாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு, நாமே அரைத்துப் பயன்படுத்தியதாக இருந்ததுதான்.

அத்தகைய அசல் மஞ்சள், கிருமி நாசினியாகவும் செயல்படும்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் மஞ்சளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்படுகிறது. மஞ்சள் அதிக நிறமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகப் பல செயற்கை நிறமிகள் மற்றும் வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. 

இத்தகைய வேதிப்பொருள்கள் கலந்த மஞ்சளைப் பயன்படுத்தும்போது சருமத்தில் அரிப்பு மற்றும் கறுப்பு நிறத் திட்டுகள் போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படுகின்றன. கலப்பட மஞ்சளைப் பயன்படுத்தும்போது அது சுவாசக்குழாய் வழியாக உள்ளே சென்றால், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற சிக்கல்களையும் உண்டாக்கும்.

மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு நலம் பயக்கக்கூடியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது அசல் மஞ்சளா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

மஞ்சள்தூள்

கடைகளில் விற்கும் தரமற்ற  மஞ்சள்தூளைத் தவிர்த்து, தரமான மஞ்சள் கிழங்குகளை வாங்கி, தேவைக்கேற்ப நாமே அரைத்துப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கேற்ப (Skin type), அசல் மஞ்சளைப் பயன்படுத்தி குளிப்பது எப்போதும் நன்மையே தரும்.

சமையல் பயன்பாட்டிலும் தரமான மஞ்சளைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தச் சம்பவத்தில் மஞ்சள் பூசிக்கொண்ட மணமகள் உயிரிழந்திருக்கிறார். தவிர, பலருக்கும் உடல்நலம் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. எனவே, அந்த மஞ்சளின் தரம் மற்றும் அதில் கலக்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதுபோன்ற செய்திகளைப் பார்த்ததும், மஞ்சள் உபயோகமே தவறு என்ற எண்ணத்தில் பலரும் அதைத் தவிர்க்க நினைப்பார்கள். மஞ்சளின் தரம் அறிந்து பயன்படுத்தும்போது அந்தப் பயம் தேவையில்லை. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...