Skip to main content

அட்லாண்டிக்: சொகுசு கப்பலில் 'ஹண்டாவைரஸ்' தாக்குதல் - சிக்கிய 2 இந்தியர்கள்! - என்ன நடந்தது?

'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் சிலருக்கு உலகின் மிக ஆபத்தான 'ஹண்டாவைரஸ்' (Hantavirus) தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹான்டா வைரஸ்
ஹான்டா வைரஸ்

இந்தப் பயணத்தின் இடையே, இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் கப்பலில் பணிபுரியும் 61 ஊழியர்களில், இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்களோ அல்லது தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்களோ வெளியிடப்படவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்களா என்பதும் மர்மமாகவே உள்ளது.

அர்ஜென்டினாவில் ஒரு பறவையின் கழிவுகளிலிருந்து கிளம்பிய தூசியை சுவாசித்ததே இந்தத் தொற்றுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தசைவலி எனத் தொடங்கும். அடுத்த 72 மணி நேரத்தில் நுரையீரலைப் பாதித்து சுவாசத்தை நிறுத்தக் கூடியது. இதன் இறப்பு விகிதம் 50% ஆகும். இதற்குத் தற்போது தடுப்பூசியோ அல்லது பிரத்யேக மருந்தோ இல்லை.

தற்போது இந்தக் கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்கு வரும் மே 11-ம் தேதி பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

MV Hondius
MV Hondius

இந்தியாவில் ஏற்கனவே 2008 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சிலருக்கு ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் (Leptospirosis) போலவே இருப்பதால், மருத்துவர்கள் இதைக் கண்டறிவதில் சவால்கள் உள்ளன. கப்பலில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...