Doctor Vikatan: என் குழந்தைக்கு 2 வயதாகப் போகிறது. குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஒன்றேகால் வயதில் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து, மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆன்டிபயாட்டிக் கொடுத்து சரியானது. ஆனாலும் அடிக்கடி காய்ச்சல் வருகிறது. நாங்களும் ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறோம். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் காய்ச்சல் திரும்பத் திரும்ப வருகிறது. இதற்கு என்ன காரணம், என்ன தீர்வு? - சுகந்தி, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி மருத்துவர் சஃபி சுலைமான் குழந்தையின் வயதைக் குறிப்பிட்ட நீங்கள், ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று குறிப்பிடவில்லை. ஒன்றேகால் வயதில் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்ததாகச் சொல்லியிருப்பதால், ஒருவேளை பெண் குழந்தையாக இருப்பின், அந்த இன்ஃபெக்ஷன் மீண்டும் மீண்டும் வருகிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும். பொதுவாகவே, ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண் குழந்தையாக இருந்தால், சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏதேனும் பிர...