Doctor Vikatan: என் வயது 48. எனக்குப் பல வருடங்களாக இரவில் தினமும் பால் குடிக்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தினமும் பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு வீடியோவில் பார்த்தேன். இது உண்மையா...? பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் பெண்கள் கட்டாயம் தினமும் பால் குடிக்க வேண்டும். பாலில் அபரிமிதமான கால்சியம் சத்து உள்ளது. அது பெண்களின் உடல்நலத்துக்கு, குறிப்பாக அவர்களின் எலும்புகளின் நலத்துக்கு மிக மிக முக்கியம். பால் குடிப்பதால் எடை அதிகரிக்கும் என்ற பயத்தில் பல பெண்களும் அதைத் தவிர்ப்பதாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். பால் குடிப்பதால் உடல் எடை அதிகரித்துவிடாது. ஏனெனில் 100 மில்லி பாலில் வெறும் 85 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆனால், அதில் 3.2 கிராம் அளவு புரதச்சத்து இருக்கிறது. அதுவும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது. எனவே, பால் குடிக்கப்...