Doctor Vikatan: வயிற்றுப் பிரச்னை முதல், சளி, இருமல் என உடல்நலம் பாதிக்கப்படும்போதெல்லாம் நான் ஆங்கில மருந்துகள் எடுக்க மாட்டேன். சித்த மருந்துகள் எடுத்துச் சரியாக்கிக் கொள்வதுதான் வழக்கம். ஆனால், எப்போது சித்த மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலும் எனக்கு மலச்சிக்கல் பிரச்னையும் கூடவே வந்துவிடுகிறது. சித்த மருந்துகள் உடல் சூட்டைக் கிளப்புமா... மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க என்ன செய்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சித்த மருந்துகள் மலச்சிக்கலை உண்டாக்கும் என்பது தவறான கருத்து. பெரும்பாலான சித்த மருந்துகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதுதான் உண்மை. சித்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் ஏற்படுவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். உங்கள் கேள்வியைப் படிக்கும்போது, உங்களுக்கு உடல்நலமில்லாத போதெல்லாம் நீங்களாகவே சித்த மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவீர்கள் என்று தெரிகிறது. இப்படி முறையான மருத்துவ ஆலோசனை இன்றி, நீங்களாகவே மருந்துகளை எடுத்த...