"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள். நெதன்யாகு ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக் உங்களுடன் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... ஒன்று, இறைவனுக்கு நன்றி, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இரண்டாவது, நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். மூன்றாவது, எனது புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாக இப்போது குணப்படுத்தப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்ட ஒரு விஷயம். ...