Doctor Vikatan: என் வயது 45. மாதந்தோறும் பீரியட்ஸின்போது கடுமையான தலைவலி வருகிறது. மற்ற நாள்களில் நார்மலாகி விடுகிறேன். தலைவலிக்கு மாத்திரை போடாமல் என்னால் சமாளிக்கவே முடிவதில்லை. பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்தத் தலைவலிக்கு என்ன காரணம்... என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்த வகைத் தலைவலியை 'மென்ஸ்ட்ருவல் மைக்ரேன்' (Menstrual migraine) என்று சொல்வோம். மாதவிடாய்க்கு முன்பு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் 'ப்ரீமென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்' அறிகுறிகள் மாதிரியான ஒன்றுதான் இதுவும். பீரியட்ஸ் முடிந்ததும் தலைவலி தானாகச் சரியாகிவிடும். மற்ற நாள்களைவிட மாதவிடாய் நாள்களில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று. இந்த நாள்களில் காரமான, மசால...