Skip to main content

Doctor Vikatan: ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை; சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் பேத்திக்கு நான்கு வயதாகிறது. அவள் மலம் கழித்து ஒரு வாரமாகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை தேவையா?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்

நான்கு வயது குழந்தை ஒரு வாரமாக மலம் கழிக்காமல் இருந்தால் உடனடியாக குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது பெரும்பாலும் பழக்கம் (Habitual) சார்ந்த மற்றும் உணவு சார்ந்த மலச்சிக்கல் (functional constipation) பிரச்னைதான். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுத்தால், சீக்கிரமே குணப்படுத்த முடியும்.

நார்ச்சத்து குறைவான உணவுப்பழக்கமே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணமாகும். வெள்ளை அரிசி, மைதா, பிஸ்கட், ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது,  காய்கறி, பழங்கள் குறைவாகச் சாப்பிடுவது போன்றவை மலம் உருவாகும் அளவைக் குறைக்கிறது. இதனுடன் தண்ணீர் குறைவாகக் குடிப்பதும் மலத்தை கெட்டியாக்கி, அதை வெளியேற்றுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது.

மலம் கழிக்கும்போது வலியைச் சந்தித்த அனுபவம் இருந்தால், குழந்தை  அதற்கு பயந்து மலம் கழிக்காமல், அதை அடக்க ஆரம்பிக்கும். இந்தப் பழக்கம், மலச்சிக்கல் பிரச்னையை நீடிக்கச் செய்யும். பள்ளிக்குச் செல்ல ஆரம்பிப்பது,  பயணம் அல்லது வீட்டுச் சூழலில் மாற்றம் போன்றவைகூட மலம் கழிக்கும் பழக்கத்தை பாதிக்கலாம்.

மலச்சிக்கல் | Constipation

மலச்சிக்கல் பிரச்னைக்கு அரிதான சில மருத்துவ காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism) அல்லது குழந்தைகளை பாதிக்கும் பெருங்குடல் சார்ந்த குறைபாடு (Hirschsprung disease) போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், இவை பரவலான காரணங்கள் அல்ல.

மலச்சிக்கலுடன், வயிறு பெரிதாக வீங்குதல், வாந்தி, ரத்தம் கலந்து மலம் வெளியேறுவது, கடும்வலியால் குழந்தை அழுதல், உணவு சாப்பிடுவதில் விருப்பமின்மை போன்ற அறிகுறிகளும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

உணவில் மாற்றம் செய்வது மிக முக்கியம். தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும் சேர்க்க வேண்டும். இவை மலம் மென்மையாகவும் எளிதாகவும் வெளியேற உதவும்.

தண்ணீர் போதுமான அளவில் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் சிறு அளவுகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உருவாக்கப்பட வேண்டும். இது மலம் கெட்டியாகாமல் தடுக்கும்.

தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும் சேர்க்க வேண்டும்.

தினசரி ஒரே நேரத்தில், குறிப்பாக, காலை உணவுக்குப் பிறகு, 5–10 நிமிடங்கள் அமைதியாக உட்கார வைத்து மலம் கழிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். குழந்தைக்கு அழுத்தம் கொடுக்காமல், அமைதியான சூழலில் பழக்கப்படுத்துவது முக்கியம்.

வெளியில் விளையாடுதல் மற்றும் உடல் இயக்கம் போன்றவை குடல் இயக்கத்தை மேம்படுத்தும். சில சமயங்களில் மருத்துவர் ஆலோசனையின்படி மலமிளக்கி (stool softener)  மருந்துகள் தேவைப்படலாம். இவை வலியின்றி மலம் கழிக்க உதவி செய்து, பயத்தைக் குறைக்கும்.  ஆரம்பத்திலேயே சரியான உணவு மற்றும் பழக்கங்களைச் சரி செய்தால், பெரும்பாலும் இந்த நிலை முழுமையாக சரியாகிவிடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...