Doctor Vikatan: என் பேத்திக்கு நான்கு வயதாகிறது. அவள் மலம் கழித்து ஒரு வாரமாகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ். மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ் நான்கு வயது குழந்தை ஒரு வாரமாக மலம் கழிக்காமல் இருந்தால் உடனடியாக குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது பெரும்பாலும் பழக்கம் (Habitual) சார்ந்த மற்றும் உணவு சார்ந்த மலச்சிக்கல் (functional constipation) பிரச்னைதான். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுத்தால், சீக்கிரமே குணப்படுத்த முடியும். நார்ச்சத்து குறைவான உணவுப்பழக்கமே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணமாகும். வெள்ளை அரிசி, மைதா, பிஸ்கட், ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது, காய்கறி, பழங்கள் குறைவாகச் சாப்பிடுவது போன்றவை மலம் உருவாகும் அளவைக் குறைக்கிறது. இதனுடன் தண்ணீர் குறைவாகக் குடிப்பதும் மலத்தை கெட்டியாக்கி, அதை வெளியேற்றுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது. மலம் கழிக்கும்போது வலியைச் சந்தித்த அனுபவம் இருந்தால், குழந்தை அதற்கு பயந்து மலம் கழிக்...