Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர், தினமும் கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பதைப் பல வருடங்களாகப் பின்பற்றுகிறார். கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் ரிஸ்க் குறையும், உடல் எடை குறையும் என்கிறார்... அது உண்மையா... எல்லோரும், தினமும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கோதுமைப்புல் சாறு குடிப்பதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்று நாம் நேரடியாகச் சொல்லிவிட முடியாது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதனைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் (Constipation) பிரச்னையைத் தவிர்க்கலாம். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் என்ற அடிப்படையில் பார்த்தால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கோதுமைப்புல் சாற்றை உங்கள் உறவினர் போல தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மூலிகை மருந்து போல பெரிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றாலும், அவ்வப்போது குடிக்கலாம். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்குத...