Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1 என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை. வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என் தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு? -Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination). நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்...