Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சா...