Skip to main content

Apollo: 8000 ரோபோடிக் அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்த அப்போலோ

அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals) பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் துல்லியமான மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் முன்னிறுத்தும் சிகிச்சைகளில் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து காட்டிவரும் அர்ப்பணிப்பில் இது ஒரு மிக முக்கிய மைல்கல்லாகும்.

இந்தச் சாதனையின் மூலம் தமிழ்நாட்டின் பன்னோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுக்கான மிகப்பெரிய ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டத்தையும், சென்னையின் மிக விரிவான ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பப்பையும் அப்போலோ மருத்துவமனை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு அதி நவீன மற்றும் துல்லியமான சிகிச்சை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்போலோ
அப்போலோ

டா வின்சி Xi (da Vind XI), மேகோ (MAKD), ஹியூகோ ஆர்ஏஎஸ் (HUGO RAS) எஸ்எஸ்ஐ மந்திரா (SSI Mantra) மற்றும் சிஎம்ஆர் (CMR) உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த ரோபோடிக் அறுவை சிகிச்சைச் சூழலை அப்போலோ உருவாக்கியுள்ளது இந்த பன்முகத் தொழில்நுட்ப வசதியானது. நோயின் தன்மை சிகிச்சையின் சிக்கலான நிலை மற்றும் நோயாளியின் தனிப்பட்ட உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற மிகச் சரியான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. இது அறுவை சிகிச்சையின் துல்லியம், பாதுகாப்பு மற்றும் வெற்றி விகிதத்தை அதிகரிக்கிறது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட்டின் நிர்வாகத் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி[Dr Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Enterprise Limited] இது குறித்துப் பேசுகையில், "அப்போலோ மருத்துவமனைகளைப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பம் என்பது எங்களது இறுதி இலக்கு அல்ல; அதையும் தாண்டி இதுவரையில்லாத சிறந்த மருத்துவத் தீர்வுகளை அளிப்பதற்கும் நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக பின்பற்றி வருகிறோம். நாங்கள் ரோபோடிக் சிகிச்சைகளுக்கான வசதிகளை விரிவுபடுத்தும்போது சிகிச்சைகளில் துல்லியம், பாதுகாப்பு மற்றும் நோயாளிகளுக்கே முன்னுரிமை என்பதிலேயே எங்கள் முழுக் கவனமும் உள்ளது.

அப்போலோ
அப்போலோ

8,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறோம். என்பது. புதிய கண்டுபிடிப்புகள் மருத்துவரீதியாக அர்த்தமுள்ளதாகவும், பொறுப்புணர்வுடனும், அதே சமயம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் எங்கள் மருத்துவர்களுக்கு அதிகத் துல்லியத்தையும் பெரும் நம்பிக்கையையும் அளிக்கிறது, அதேவேளையில் நோயாளிகள் மிக விரைவாகவும்" பாதுகாப்பாகவும் குணமடைய உதவுகிறது." என்று கூறினார்.

அப்போலோ மருத்துவமனைகளின் உத்திசார் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் சிந்தூரி ரெட்டி, (Sindoori Reddy, Director Strategy, Apollo Hospitals) கூறுகையில், "எங்களது ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டம் ஒவ்வொரு முறையும் அந்தந்த நோயாளிக்குச் சரியான மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எளிய நோக்கத்துடனும், உறுதியான கொள்கையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன தளங்களில் முதலீடு செய்ததன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் துணைபுரியும் சிகிச்சையில் சீரான தீர்வுகளை உருவாக்கும் மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகளைத் தரும் எதிர்காலத்திற்கு ஏறிற ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அத்தியாவசியமான கன்சோலை, எங்கு எடுத்து செல்ல முடிகிற உலகின் முதல் கையடக்க ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் கன்சோல் (portable robotic surgeon console போன்ற புதுமைகள். சாத்தியமானவற்றை இன்று மறுவரையறை யறை செய்கின்றன. நிபுணத்துவம் இன்று எல்லைகள் கடந்து எல்லோருக்கும் கிடைப்பதும், இதுவரை அறுவை சிகிச்சையின் மேம்பட்ட

மருத்துவ பராமரிப்புக்கான வசதி எளிதில் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தவும் உதவுகிறது. எங்களின் உண்மையான வெற்றி என்பது எண்களில் மட்டும் இல்லை; நோயாளிகள் விரைவாகக் குணமடைவதிலும், மருத்துவப் பராமரிப்பு மூலமான பாதுகாப்பிலும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதிலும் தான் உள்ளது." என்றார்.

அப்போலோ மருத்துவமனைகளில் ரோபோடிக் சிகிச்சையானது சிறுநீரகவியல் (Urolog), மகளிர் மருத்துவம் [Gynecology], பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை (General & Laparoscopic Surgery), குடல் மற்றும் மார்பு அறுவை சிகிச்சை (Colorectal & Thoracic Surgery] என பல்வேறு சிறப்பு மருத்துவ பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டமானது நவீன தொழில்நுட்பம், தரப்படுத்தப்பட்ட மருத்துவ நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றை அன்றாட மருத்துவ நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது.

அப்போலோ
அப்போலோ

இதுவரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் 30 முதல் 40 சதவீதம் மிக சிக்கலான மருத்துவ நடைமுறைகள் இப்போது ரோபோடிக் முறையிலேயே செய்யப்படுகின்றன. இது மாநிலத்திலேயே அதிகபட்ச விகிதங்களில் ஒன்றாகும். வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட, ரோபோடிக் முறையில் செய்யப்படும் சிகிச்சைகளில் 50% வரை குறைவான ரத்த இழப்பு ஏற்படுவதாகவும், நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் 1.2 நாட்கள் வரை குறைவதாகவும், அவர்கள் மிக விரைவாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதாகவும் மருத்துவ முடிவுகள் தெரிவிக்கின்றன.

அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான சிறப்புப் பயிற்சி, தகுதிச் சான்றளிப்பு மற்றும் மருத்து சிகிச்சை வழங்கும் தீர்வுகளின் மீதான தொடர் கண்காணிப்பு ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த ரோபோடிக் மருத்துவக் குழுவை அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது. மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளிகளைக் குணமனடையச் செய்யும் சிறந்த தீர்வுகள் மற்றும் நோயாளிகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆகியவற்றின் காரணமாக ரோபோடிக் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது.

அடுத்த தலைமுறை அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பிரம்மாண்டமான ரோபோடிக் கண்காட்சி ஒன்றை அப்போலோ மருத்துவமனை நடத்தியது. மருத்துவர்கள், மாணவர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு. ரோபோடிக் கருவிகளை நேரில் பார்வையிட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்துரையாடினர் இந்த புதுமையான முயற்சி, மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வுக்கான கல்வி, வெளிப்படைத்தன்மை மற்றும் மருத்துவப் புதுமைகளில் அப்போலோ மருத்துவமனைகொண்டுள்ள ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி:

1983-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்கள் தனது முதல் மருத்துவமனையைத் தொடங்கியபோது, அப்போலோ மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது

இன்று, 74 மருத்துவமனைகளில் 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட தொலைதூர மருத்துவ (Telemedicine) மையங்களுடன் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவை நிறுவனமாக அப்போலோ திகழ்கிறது.

அப்போலோ
அப்போலோ

இதய சிகிச்சையில் உலகின் முன்னணி மையங்களில் ஒன்றாக விளங்கும் அப்போலோ, இதுவரை 3,00,000-மேற்பட்ட சிகிச்சைகளையும், 2,00,000-க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சைகளையும் ஆஞ்சியோபிளாஸ்டி வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

நோயாளிகளுக்கு உலகின் மிகச்சிறந்த சிகிச்சை செய்வதற்காக, மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஆராய்ச்சி மற்றும் கிடைப்பதை உறுதி புத்தாக்கங்களில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது: இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பங்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அப்போலோ குடும்பத்தைச் சேர்ந்த 1,20,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மிகச்சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதிலும், இந்த உலகத்தை நாம் பெற்றதை விடச் சிறந்ததாக மாற்றிக் காட்டுவதிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...