'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?' தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test
சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' (Flamingo balance test). வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும் ஒற்றைக்காலில் நின்று பாருங்களேன் என்பதுதான் இந்த 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'டின் அறிவுறுத்தல். ஃபிளமிங்கோ (Flamingo) என்பது நீண்ட கழுத்தையும், மிக நீண்ட மெல்லிய கால்களையும் கொண்ட நீர்வாழ் பறவை இனம். தமிழில் இதை 'பூநாரை' என்று சொல்வார்கள். இந்தப் பறவைகள் எப்போதும் ஒற்றைக் காலில் நிற்பதை வழக்கமாக வைத்திருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்த டிரெண்டுக்கு 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் Doctor Vikatan: காப்பர் டி பொருத்திக்கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? நிலைதடுமாறாமல் அல்லது கீழே விழாமல் ஒரு நபரால் எவ்வளவு நேரம் ஒற்றைக்காலில் நிற்க முடிகிறது என்பதைக் கண்டறியும் இந்த டெஸ்ட், ஆரம்பத்தில், விளையாட்டுத்துறையினர் மற்றும் முதியோர்களுக்கான...