எ டையைக் குறைத்து, உடலை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவருக்குமான ஆசை. ஆனால், சிலர்தான் அதைச் செயல்படுத்துவார்கள். சிலர், முயற்சியில் தோல்வியுற்று பயிற்சி செய்வதையே நிறுத்திவிடுவர். இதற்குக் காரணம், தொடக்கத்திலேயே அதிகப்படியான பயிற்சிகளைச் செய்வது. உடனே ஃபிட்டாக வேண்டும் என்ற ஆசை மிகுதியில் எடுத்த எடுப்பில் எல்லா பயிற்சிகளையும் செய்வது, உடலுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். ஒருவித சோர்வை அளித்து, பயிற்சி செய்யும் மனநிலையையே போக்கிவிடும். உடற்பயிற்சியில் எது சரி... எது தவறு எனத் தெரிந்துகொண்டால், பாதிப்பில் இருந்து தப்பலாம். ஹெல்த்தியாக ஃபிட்டாகலாம்! உடற்பயிற்சி செய்யக்கூடாது சிலர், காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களைக் கழித்துவிட்டு வெறும் வயிற்றில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வார்கள். சிலர், நொறுக்குத்தீனி, முட்டை என நன்றாக உண்டுவிட்டு, காபி குடித்த பின் உடற்பயிற்சி செய்வார்கள். இரண்டுமே தவறு. செய்யலாம் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலின் தசைநார்கள் பாதிக்கப்படும். விரைவில் சோர்வு ஏற்படும். காலையில் எழுந்ததும், பல் துலக்கிய பின் முந்தைய நாள் இரவே ஊறவைத...