Skip to main content

Fitness: 'வெறும் வயிற்றில் உடற்பயிற்சி...' - செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை என்னென்ன?

டையைக் குறைத்து, உடலை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவருக்குமான ஆசை. ஆனால், சிலர்தான் அதைச் செயல்படுத்துவார்கள்.

சிலர், முயற்சியில் தோல்வியுற்று பயிற்சி செய்வதையே நிறுத்திவிடுவர். இதற்குக் காரணம், தொடக்கத்திலேயே அதிகப்படியான பயிற்சிகளைச் செய்வது.

உடனே ஃபிட்டாக வேண்டும் என்ற ஆசை மிகுதியில் எடுத்த எடுப்பில் எல்லா பயிற்சிகளையும் செய்வது, உடலுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

ஒருவித சோர்வை அளித்து, பயிற்சி செய்யும் மனநிலையையே போக்கிவிடும். உடற்பயிற்சியில் எது சரி... எது தவறு எனத் தெரிந்துகொண்டால், பாதிப்பில் இருந்து தப்பலாம். ஹெல்த்தியாக ஃபிட்டாகலாம்!

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

சிலர், காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களைக் கழித்துவிட்டு வெறும் வயிற்றில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வார்கள். சிலர், நொறுக்குத்தீனி, முட்டை என நன்றாக உண்டுவிட்டு, காபி குடித்த பின் உடற்பயிற்சி செய்வார்கள். இரண்டுமே தவறு.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலின் தசைநார்கள் பாதிக்கப்படும். விரைவில் சோர்வு ஏற்படும். காலையில் எழுந்ததும், பல் துலக்கிய பின் முந்தைய நாள் இரவே ஊறவைத்த பாதாம், வால்நட் போன்றவற்றை ஐந்தாறு சாப்பிட்டுவிட்டு, நீராகாரம் அல்லது தண்ணீர் அருந்திய பின், சிறுநீர் கழித்துவிட்டு உடற்பயிற்சிக்குச் செல்லலாம்.

டிரெட்மில்
டிரெட்மில்

ஆரம்பத்திலேயே சிலர் ஸ்போர்ட்ஸ் டிரிங்க், புரோட்டின் ஷேக் எல்லாம் எடுத்துக்கொண்டு உடற்பயிற்சிக்குச் செல்வார்கள். 10 நிமிடங்கள் டிரெட்மில்லில் நடந்துவிட்டு, மடக்மடக்கென இவற்றை அருந்துவார்கள். இது மிகவும் தவறான விஷயம்.

ஜூஸ், ஸ்போர்ட்ஸ் டிரிங்க் போன்றவை அதிக கலோரி நிறைந்தவை. இதை அதிகமாகப் பருகுவதால், உடற்பயிற்சி செய்தற்கான பலனே இல்லாமல் போய்விடும். நாவறட்சி ஏற்படும்போது சர்க்கரை சேர்க்காமல் உப்பு மட்டும் சேர்த்த எலுமிச்சை ஜூஸ் சிறிது பருகலாம்.

எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ஜூஸ்

உடற்பயிற்சி செய்த பிறகு சாப்பிட்டால் கலோரி சேர்ந்துவிடும் எனச் சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மாலை அல்லது இரவில் உடற்பயிற்சி செய்த பின், இரவு உணவைத் தவிர்க்கிறார்கள். இது மிகவும் தவறு.

கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளைத்தான் உடனடியாகச் சாப்பிடக் கூடாது. உடற்பயிற்சிக்குப் பின் 30 - 45 நிமிடங்கள் கழித்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின்கள், மாவுச்சத்து என எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த உணவுகளை உட்கொள்ளலாம். கொய்யாப்பழம், மாதுளை போன்ற அதிக இனிப்பு இல்லாத பழங்களைச் சாப்பிடலாம்.

பிரியாணி
பிரியாணி

சிலர் 'நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வொர்க்அவுட் செய்தால், எந்தப் பிரச்னையும் இல்லை' என நினைத்து, பிரியாணி, அரிசி சோறு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பாஸ்ட் ஃபுட் என வெளுத்துக்கட்டுவார்கள்.

சிலர் நேரத்துக்குச் சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள். உடலைக் கெடுக்கும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு வொர்க்அவுட் செய்தால், எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும் என நினைப்பார்கள்.

உடற்பயிற்சியின் பலன்கள் முழுமையாகக் கிடைக்க, வாழ்க்கை முறையில் மாற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மூன்று வேளைக்குப் பதில், ஆறு வேளையாக உணவைப் பிரித்து, சிறிது சிறிதாக உட்கொள்ள வேண்டும்.

கீரை, காய்கறிகள், முட்டை, எண்ணெய் அதிகம் சேர்க்காத, வீட்டிலேயே சமைத்த இறைச்சி, நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அரிசி உணவை அளவோடு சாப்பிட வேண்டும். இரவில் குறித்த நேரத்துக்குப் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். ஏழெட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.

sleep | தூக்கம்
sleep | தூக்கம்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...