Doctor Vikatan: பலமான விருந்தில் சாப்பிடும்போதோ, என்றோ ஒருநாள் ஸ்வீட்ஸ் கொஞ்சம் அதிகம் சாப்பிடும்போதோ, உடனே வெந்நீர் குடித்துவிட்டால், உடலில் கொழுப்பு சேராது, எடையும் கூடாது என்று பலரும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் டயட்டீஷியன் கற்பகம் பலமான விருந்தும், ஸ்வீட்ஸும் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் வெயிட் ஏறாது என்றால், எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் எல்லோரும் மிகச் சுலபமாக எடையைக் குறைத்துவிடுவார்களே.... உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பதெல்லாம் தேவையே இருக்காதே... பொதுவாக பலமான விருந்தோ, ஸ்வீட்ஸோ சாப்பிட்டால் உங்கள் எடை நிச்சயம் கூடியிருப்பதைப் பார்க்கலாம். அதற்கு காரணம் அந்த உணவுகள் மற்றும் இனிப்புகளிலுள்ள கலோரிகளின் அளவு. அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடும்போது சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இரவு உணவுக்கு கலோரிகள் அதிகமான விருந்து உணவு அல்லது அதிக இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். முன்கூட்டியே அப்படி சாப்பிடப்...