Doctor Vikatan: என் வயது 40. சிறுநீர் கழிக்கும்போது சில சமயங்களில் ஒருவித மருந்து வாடை வருகிறது. சில சமயங்களில் வேறு வேறு வாடை வருகிறது. இது சுகர் இருப்பதற்கான அறிகுறியா? சிறுநீர் வாடைக்கு என்ன காரணம்.... எந்த வாடை ஏன் ஏற்படுகிறது என்று ஒருவரால் கண்டுபிடிக்க முடியுமா? இதற்கு சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா மருத்துவர் நிவேதிதா சிறுநீரில் வேறு வேறு வாடை அடிப்பதாகச் சொல்கிறீர்கள். மருந்து வாடை அடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?, அப்படி சில மருந்துகள் சிறுநீரில் வாடையை ஏற்படுத்தலாம். வாடையோடு சேர்த்து வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பாருங்கள். அதாவது, வாடை தவிர, சிறுநீரில் எரிச்சலோ, சிறுநீர் கழிக்கும்போது வலியோ, அடிவயிற்றில் வலியோ, சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதோ, கலங்கலாக வெளியூறுவதோ இருக்கிறதா என்று பாருங்கள். இப்படி எல்லாம் இருந்தால், உங்களுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன...