உ ள்நாக்கு சதை வளர்ச்சியினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். உள்நாக்கு சதை வளர்ச்சி என்றால் என்ன, அது ஏன் வருகிறது, அதனை எவ்வாறு சரி செய்வது என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடையை தெரிந்துகொள்வதற்காக சென்னையில் உள்ள பொதுநல மருத்துவர் டாக்டர் அருணாச்சலத்திடம் பேசினோம். throat problem அதென்ன உள்நாக்கு..? ''உள்நாக்கை உடற்கூறியல் ரீதியாக யுவ்லா (uvula) எனக் கூறுவோம். இது மனிதனாக பிறக்கக்கூடிய அனைவருக்கும் கட்டாயமாக இருக்கக்கூடிய ஒன்று. இதை உணவுக் குழாயின் ஆரம்பப்பகுதி எனவும் சொல்லலாம். நமது தொண்டையில் உள்நாக்கு மட்டுமல்ல, இருபுறமும் டான்சில் எனப்படும் நிணநீர் சுரப்பி இருக்கும். சிலருக்கு டான்சில் பெரியதாக இருக்கும். சிலருக்கு சிறியதாக இருக்கும். இதன் முக்கிய நோக்கம் அதிகப்படியான எச்சிலை சுரக்க வைத்து தொண்டை மற்றும் உணவு குழாயின் ஆரம்ப பகுதியை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதுதான். Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது! உள்நாக்கு சதை வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது? பிறர் இருமும் போதும் தும்மும் போதும் அவர்களிடமிரு...