Tamil News today live: அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு... இன்று தீர்ப்பு!
அதிமுக வழக்கில் இன்று தீர்ப்பு..! அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். கடந்த 22 -ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வ வாதமும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இன்று காலை 10:30 மணி அளவில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.