டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி ஆடிய ஆட்டத்திற்காக அவரை பாராட்டாதவர்களே இல்லை. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தரும் விராட் கோலியை மனமார பாராட்டியிருக்கிறார். ஆனால், அந்த பாராட்டின் கடைசியில் ட்விஸ்ட் கொடுத்து ஒரு பன்ச்சும் வைத்திருக்கிறார். Akthar விராட் கோலி குறித்து அவர் கூறியதாவது, “என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு எதிராக, அவர் தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்ததால் மட்டுமே இப்படி ஒரு சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். ”மேலும், 'அவர் 3 வருடங்களாக சரியாக ஆடவில்லை. கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். நிறைய பேர், அவரிடம் நிறைய விஷயங்களை சொன்னார்கள். மக்கள் அவரது குடும்பத்தைக்கூட சர்ச்சைக்குள் இழுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து கடினமாகப் பயிற்சி செய்துவந்தார். இதன் பலனாக தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, பட்டாசாக வெடித்திருக்கிறார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.' இவர் கோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சோயிப் அக்தர், இதன்பிறகு சோயப் அக்தர்...