ரிஷி அமைச்சரவையில் மீண்டும் சுவெல்லா | உக்ரைனுக்கு இத்தாலி பிரதமர் ஆதரவு- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை வாழ்த்தினார் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்.
இத்தாலியின் பிரதமர் ஜியார்ஜியா மெலானி பதவிக்கு வந்த பிறகு முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்ரைனிற்கும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தில் பெண்கள், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்புகளைத் துவக்கிவைத்த ஆஷ் கார்டர் 68 வயதில் காலமானார்.
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி!
பாகிஸ்தானி தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ஷத் ஷரீப் கென்யாவில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அஜாம் டரார் அவரது பதவியைச் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்தார்.
பங்களாதேஷை உலுக்கிய சித்ராங் புயலில் சுமார் 35 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
65 ஆண்டுகள் குளிக்காமல் இருந்த இரானைச் சேர்ந்த, உலகின் மிக அழுக்கான மனிதர் தன் 94-வது வயதில் உயிரிழந்தார்.
ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் மீண்டும் உள்துறை அமைச்சரானார் சுவெல்லா பிரேவர்மேன்.
சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் பெர்மிட், மோட்டார் சைக்கிள் வாகனத்தை விட அதிகமாம்
Comments
Post a Comment