Skip to main content

Doctor Vikatan: தினமும் கோதுமைப்புல் சாறு குடித்தால் புற்றுநோயே வராது என்பது உண்மையா?!

Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர், தினமும் கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பதைப் பல வருடங்களாகப் பின்பற்றுகிறார். கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் ரிஸ்க் குறையும், உடல் எடை குறையும் என்கிறார்... அது உண்மையா... எல்லோரும், தினமும் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கோதுமைப்புல் சாறு குடிப்பதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்று நாம் நேரடியாகச் சொல்லிவிட முடியாது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதனைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் (Constipation) பிரச்னையைத் தவிர்க்கலாம்.

 உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் என்ற அடிப்படையில் பார்த்தால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கோதுமைப்புல் சாற்றை உங்கள் உறவினர் போல தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.  மூலிகை மருந்து போல பெரிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றாலும், அவ்வப்போது குடிக்கலாம். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.
இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சில நுண்ணூட்டச்சத்துகள் (Micronutrients) இருப்பதால், இது ஆரோக்கியத்திற்கு நல்லது. கோதுமைப்புல் சாறு புற்றுநோய்க்கான தாக்கத்தை குறைக்கும் என்பது குறித்து இதுவரை பெரிய அளவில் ஆய்வுபூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை.

கோதுமைப்புல் சாறு புற்றுநோய்க்கான தாக்கத்தை இது குறைக்கும் என்பது குறித்து இதுவரை பெரிய அளவில் ஆய்வுபூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை.

கோதுமைப்புல் சாறு குடிப்பதால் உடல் எடை குறையும் (Weight loss) என்பது முற்றிலும் தவறான ஒரு கருத்து. எந்தவொரு  குறிப்பிட்ட மூலிகைச் சாறோ அல்லது உணவுப்பொருளோ மட்டும் உடல் எடையைக் குறைத்துவிடாது. கோதுமைப்புல் சாற்றைத் தொடர்ந்து குடித்தால் மட்டும் நிச்சயமாக உடல் எடை குறைய வாய்ப்பில்லை. உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், அதனுடன் சேர்த்து சரியான உணவுக் கட்டுப்பாடு (Diet control), ஆரோக்கியமான வாழ்க்கை முறை, யோகா, நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவையும் பின்பற்றப்பட வேண்டும். எடைக்குறைப்பிற்கான 'மேஜிகல் ரெமிடி' (Magical remedy) போல எந்த ஒரு பொருளும் செயல்படாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...