Skip to main content

Doctor Vikatan: மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடலாமா?

Doctor Vikatan: என் வயது 62.  ரத்தச் சர்க்கரை அளவு 290 இருக்கிறது.   மாத்திரைகளும் இன்சுலினும் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன்.  மாத்திரைகளுக்குச் செலவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் நான் மலிவு விலை மருந்தகங்களில்  மாத்திரை வாங்கிச் சாப்பிடலாமா... அதனால் பக்க விளைவுகள் வருமா? எனக்கு ஹீமோகுளோபின் அளவு  9ஆக உள்ளது சிகிச்சை தேவையா.... குழந்தைகள் அதிகமாகச் சத்தம் போட்டாலும் சண்டை போட்டாலும் ஒருவித படபடப்பு வருகிறது. இதற்கு என்ன செய்வது?  எத்தனை மாதங்களுக்கொரு முறை சுகர் டெஸ்ட் செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்

மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கிச் சாப்பிடலாம். அதில் எந்தப் பிரச்னையும் வராது. வசதியானவர்களேகூட இன்று மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், அப்படிச் சாப்பிடும்போது, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால், அதற்கேற்ப மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

ஹீமோகுளோபின் அளவு 9 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மிதமான ரத்தச்சோகை (அனீமியா) பாதிப்பைக் குறிக்கும். அந்த அளவானது 8-க்குக் கீழ் குறைந்தால் அது தீவிர ரத்தச்சோகை பிரச்னை என அர்த்தம். எனவே, இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காவது இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.  மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளுங்கள்.  இரும்புச்சத்துள்ள உணவுப்பழக்கமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, கீரை வகைகள், புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, கறிவேப்பிலை சட்னி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடர் பச்சை நிறத்தில் உள்ள கோவக்காய், பாகற்காய், குடமிளகாய் போன்ற காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகமிருக்கும்.

அடர் பச்சை நிறத்தில் உள்ள கோவக்காய், பாகற்காய், குடமிளகாய் போன்ற காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகமிருக்கும். அசைவத்தில் ஈரல், இதயம், சிறுநீரகங்களில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் அவற்றைச் சாப்பிடலாம். குழந்தைகள் சத்தம் போட்டாலும் சண்டை போட்டாலும் ஏற்படுகிற படபடப்பு ஒருவித பதற்றத்தால் வருவதுதான். அதைப் பழகிக் கொள்வதுதான் ஒரே வழி. ஒருவேளை இதயத்துடிப்பு மிகவும் அதிகரிப்பது போல உணர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம்.

சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மாதந்தோறும் டெஸ்ட் செய்து கொள்வது அவசியம். போஸ்ட் பிராண்டியல் (Postprandial) எனப்படும் சாப்பாட்டுக்குப் பிறகான டெஸ்ட் மட்டுமேகூட போதுமானது. அது 200-க்குக் கீழ் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டாம். 200-க்கு மேல் போனால் மருத்துவ ஆலோசனை அவசியம். 3 மாதங்களுக்கொரு முறை செய்யப்படும் ஹெச்பிஏ1சி டெஸ்ட்டையும் (HbA1c test) தவறாமல் எடுத்துப் பார்க்க வேண்டும்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...