Skip to main content

Doctor Vikatan: காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவது சரியா?

Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை.... ஒன்றிரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். இரண்டில் எது சரி?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

மனிதர்களின் உடலைப் பொறுத்தவரை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதுதான் நார்மலான வெப்பநிலை. நம் உடலின் ரத்தத்தின் சூடானது 98.6 டிகிரி என்ற அளவில் இருக்கும்போதுதான், நம் உடலின் ரசாயன மாற்றங்களும் மற்ற நடவடிக்கைகளும் சீராக நடக்கும். இந்த அளவைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது, அந்தச் சூட்டைத் தணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால் உடல் களைப்பாகும். காய்ச்சலின்போது ஏற்படும் அத்தனை அசௌகர்யங்களையும் உடல் உணரும். 98.8 அல்லது 99 டிகிரியை எட்டும்போது உடல்வலி, களைப்பு என எல்லாம் வரும்.

எந்த அறிகுறியுமே இல்லாமல் வரும் காய்ச்சல், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஏற்கெனவே மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி இருப்பவர்களுக்கு, காய்ச்சலின்போது அந்த வலிகள் இன்னும் அதிகமாகும்.  'திடீர்னு இடுப்பு வலிக்குது, மூட்டு வலிக்குது....' என வலியைப் பிரதான அறிகுறியாகச் சொல்லிக் கொண்டு மருத்துவரைப் பார்க்க வருவார்கள். உண்மையில், அதன் பின்னணியில் காய்ச்சல் இருக்கும்.

காய்ச்சலைத் தணிக்க பாராசிட்டமால்தான் சிறந்த மருந்து. அதை  அவரவர் எடைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.  காய்ச்சல் 102 டிகிரியை தாண்டினால் உடல்வலி,  எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பலவீனம், தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்காதது போன்றவை  சேர்ந்துகொள்ளும். தண்ணீர்கூட பிடிக்கவில்லை என்பதற்காக அதை அறவே தவிர்ப்பது ஆபத்தானது. 'நான்- கார்பனேட்டடு' (Non-Carbonated )  பானங்களை, குளிர்ச்சியின்றி குடிக்கலாம்.  மாம்பழம், லிச்சி, க்ரான்பெர்ரி என வாய்க்குப் பிடித்த  சுவையில் இதைக் குடிக்கலாம். டீ, பால், அரிசி நொய்க் கஞ்சி போன்றவற்றையும் சிறந்த உணவுகள்.

காய்ச்சலைத் தணிக்க பாராசிட்டமால்தான் சிறந்த மருந்து. அதை அவரவர் எடைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் குறையும்போது வியர்க்கும். அந்த வியர்வையின் மூலம் நாம் இழக்கும் நீர்ச்சத்து மற்றும் உப்பை ஈடுகட்டவும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். காய்ச்சலின்போது தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படையான விஷயம். அதனால்தான் காய்ச்சல் மிக அதிகமாகி, உடல் சோர்வாகி மருத்துவரை அணுகும்போது குளுக்கோஸ் ஏற்ற அறிவுறுத்துகிறார்கள். குளுக்கோஸ் ஏற்றியதும்  உடல் இன்ஸ்டன்ட் எனர்ஜி பெறுவதை உணர்வதன் பின்னணியும் இதுதான். ஆரம்பநிலை காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

5 நாள்களுக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்தாலோ,  102  டிரிக்கு மேல் காய்ச்சல் அதிகரித்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து கொள்வதுதான் சரியானது. மருத்துவர் அந்தந்த சீசனில் பரவும் காய்ச்சலின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து டெங்கு, மலேரியா, டைபாய்டு, கொரோனா போன்றவற்றுக்கான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். டெங்கு காய்ச்சலில் தட்டணுக்கள் குறையும். அது ஆபத்தான நிலை என்பதால் காய்ச்சல் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் பிளட் கல்ச்சர், யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளும் பரிந்துரைக்கப்படும்.  

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...