Skip to main content

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது.

பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது நாள் ஓரளவு குறைகிறது. மூன்றாவது நாள் அதைவிடக் குறைகிறது. இது சாதாரணமானதுதானா அல்லது கவலைப்பட வேண்டிய விஷயமா?
- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

35 வயதைக் கடந்த பெண்களில் பலருக்கும் பீரியட்ஸ் சுழற்சி மற்றும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் இந்த அறிகுறிகள் சாதாரணமானவையாகவே இருக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருக்கிறது... ஆனால், ஒரு மணி நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்கு இல்லை, ப்ளீடிங் கட்டிகளாக வெளியேறவில்லை.

அதாவது பத்து ரூபாய் நாணயத்தைவிட பெரிய அளவில் கட்டிகள் வெளியேறவில்லை, அதீத களைப்பு, மயக்கம், தலைச்சுற்றல், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் எல்லாம் இல்லை என்றால் இதைச் சாதாரணமானதாகவே எடுத்துக்கொள்ளலாம்.

அதுவே, அடிக்கடி பெரிய நாப்கின்கள் மாற்றும் அளவுக்கு ப்ளீடிங் ஆகிறது, கட்டிகளாக வெளியேறுகிறது, மற்ற அறிகுறிகளையும் உணர்கிறீர்கள் என்றால் மருத்துவ ஆலோசனை அவசியம். 35 ப்ளஸ் வயதில் எந்தெந்தக் காரணங்களால் ப்ளீடிங் அதிகமாக இருக்கலாம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

முதல் காரணம், ஹார்மோன் சமநிலையின்மையாக இருக்கலாம். முதலில் தைராய்டு பரிசோதனை செய்து பாருங்கள். வழக்கமாக மெனோபாஸுக்கு முந்தைய 'பெரி மெனோபாஸ்' அறிகுறிகள், 40 ப்ளஸ் வயதில்தான் ஆரம்பிக்கும்.

அப்போது அதிக ப்ளீடிங் ஆவது, இரண்டு, மூன்று மாதங்கள் பீரியட்ஸே வராமலிருப்பது போன்ற பீரியட்ஸ் தொடர்பான பிரச்னைகளும் ஆரம்பிக்கும். உங்களுக்கு 38 வயது என்று குறிப்பிட்டிருப்பதால், இந்த அறிகுறி, முன்னதாகவே வரும் பெரிமெனோபாஸ் அறிகுறியாகவும் இருக்கலாம்.

கர்ப்பப்பையில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருக்கும்போது அவற்றை 'ஃபைப்ராய்டு' (Fibroids) என்று சொல்வோம். அதற்கான பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டும்.  'அடினோமயோசிஸ்' (Adenomyosis)  என்ற பிரச்னையாகவும் இருக்கலாம்.  அடினோமயோசிஸ் என்றால் கரப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருப்பது.

பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கரப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும். அதுதான் அடினோமயோசிஸ். இதையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

 நீங்கள் பிளட் டெஸ்ட், ஹார்மோன் டெஸ்ட், ஸ்கேன், பாப்ஸ்மியர் போன்றவற்றைச் செய்து பாருங்கள்.
நீங்கள் பிளட் டெஸ்ட், ஹார்மோன் டெஸ்ட், ஸ்கேன், பாப்ஸ்மியர் போன்றவற்றைச் செய்து பாருங்கள்.

உங்களுடைய பிரச்னைக்கு இதுவரை எந்தச் சோதனையும் செய்யவில்லை என்றால் முதலில் மருத்துவ ஆலோசனையோடு அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பாருங்கள். ப்ளீடிங் அதிகமிருக்கும்போது ஹீமோகுளோபின் குறையலாம். ஹீமோகுளோபின் அளவை செக் செய்யுங்கள். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான 'பாப் ஸ்மியர்' பரிசோதனையையும் செய்து பாருங்கள். 

30 வயதுக்கு மேலான பெண்கள், 3 வருடங்களுக்கொரு முறை இந்த டெஸ்ட்டை செய்து பார்க்க வேண்டியது அவசியம். எனவே, நீங்கள் பிளட் டெஸ்ட், ஹார்மோன் டெஸ்ட், ஸ்கேன், பாப்ஸ்மியர் போன்றவற்றைச் செய்து பாருங்கள். இவை எல்லாம் நார்மலாக இருந்தால் பயப்படத் தேவையில்லை. 

உங்களுடைய லைஃப்ஸ்டைல் எப்படி இருக்கிறது என்பதும் முக்கியம். சரியாகத் தூங்குகிறீர்களா, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா, அதிகம் டிராவல் செய்கிறீர்களா என்றெல்லாம் பாருங்கள். ஸ்ட்ரெஸ்ஸைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள். இவை எல்லாம் சரிசெய்யப்பட்டாலே உங்கள் பீரியட்ஸ் பிரச்னை சரியாகும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...