Skip to main content

Doctor Vikatan: ஓவர் வெயிட், அதீத பசி, நள்ளிரவில் உணவுத்தேடல்... உடலா, மனதா... எதில் பிரச்னை?

Doctor Vikatan: என் மகனுக்கு 29 வயதாகிறது.  பல வருடங்களாகவே உடல் பருமனுடன்தான் இருக்கிறான். சமீபகாலமாக அவன் அடிக்கடி பசிப்பதாகச் சொல்லி, கண்டதையும் சாப்பிடுகிறான். குறிப்பாக நள்ளிரவில் உணவுத் தேடல் அவனுக்கு அதிகமாகிறது. 'இது உண்மையான பசியா இருக்காது... மனசுதான் காரணம்' என்று சிலர் சொல்கிறார்கள்.  உடல் எடையும் ஏறிக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.  

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்


ஏற்கெனவே எடை அதிகமாக இருப்பதால், உங்கள் மகனைப் போன்றவர்களுக்கு கொழுப்பின் சதவிகிதமும் அதிகமாகவே இருக்கும். அதன் விளைவாக சில ஹார்மோன்கள் முறையற்றுச் சுரக்கும். அதாவது பசியுடன் தொடர்புடைய ஹார்மோன்கள். அந்த ஹார்மோன்கள் 'கிரெலின்' (Ghrelin) என அழைக்கப்படுகின்றன.  வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும்  பசி உணர்வு ஏற்படும்... நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும்.

இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே  இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும். 

எடை அதிகமுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட இந்த ஹார்மோன் பூஜ்ஜியமாக மாறாமல், 20 முதல் 30 சதவிகிதம் வரை மீண்டும் மீண்டும் சுரந்து கொண்டே இருக்கும். எனவே, ஹார்மோன் தொந்தரவுகளால் ஏற்படும் உணவுத் தேடலாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களால் இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, தூக்கம் தொடர்பான பிரச்னைகளும் அதிகமிருக்கும். அதன் காரணமாக சரியான நேரத்துக்குச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, தூக்கம் தொடர்பான பிரச்னைகளும் அதிகமிருக்கும். அதன் காரணமாக சரியான நேரத்துக்குச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் பசியெடுப்பது போன்ற உணர்வு ஏற்படும். தாமதமாகத் தூங்கச் செல்வோருக்கு, தூங்குவதற்கு பல மணி நேரம் முன்னதாகச் சாப்பிட்டிருந்தால், விழித்திருக்கும் நேரத்தில் பசி எடுக்கும். அதனாலும் அவர்கள் கண்ட நேரத்தில் உணவுகளைத் தேடுவார்கள்... மீண்டும் மீண்டும் சாப்பிடுவார்கள்.

இந்தப் பிரச்னைகள் எல்லாமே உடலியல் தொடர்பான, ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள்தான், உளவியல் பிரச்னை அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதைத் தவிர்த்து லேட் நைட் சாப்பாட்டைத் தேடுவோரையும் அதிகம் சாப்பிடுவோரையும் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்யவோ, காயப்படுத்தவோ செய்யாதீர்கள். முடிந்தால் அவர்கள் பிரச்னையைச் சரிசெய்ய, எடையைக் குறைக்க உதவுங்கள். மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகு


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...