Skip to main content

Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது எப்படி?

2020 - 2021-ம் ஆண்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தது எல்லாம் இன்னும் கண்களில் இருந்து மறையவில்லை. மக்களின் சுய கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி போன்றவற்றால் அந்த கொரோனா ஒருவழியாக அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பின்னாளில் தூக்கக்கோளாறு sleep disruption, மூளை மூடுபனி (Brain fog) போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்கள்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன; அவற்றை எப்படி சரிசெய்வது போன்றவற்றை விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்.

''Brain fog என்ற சொல் மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுவதில்லை. அது நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை குறிப்பிடுவதற்கு மக்களிடையே இருக்கும் ஓரு சொல்லாடல். Brain fog என்ற பிரச்னை இருப்பதாக வருபவர்களிடம் முதலில் அவர்களுக்கு நினைவில் குழப்பம், தெளிவில்லாமை, ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமை, ஞாபகமறதி போன்றவற்றில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை பொறுத்தே சிகிச்சை மேற்கொள்வோம்.

Brain fog
Brain fog

தூக்கம் சார்ந்த பிரச்னை என்பது பல வகைகளாக இருக்கும். சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல் இருப்பது, தூங்கினாலும் இடையில் விழித்துக்கொள்வது, நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருப்பது, காலை எழுந்தாலும் சரியாக தூங்காதது போன்ற உணர்வு ஏற்படுவது, எந்நேரமும் தூக்கக்கலக்கத்துடனே இருப்பது போன்ற பிரச்னைகளை தூக்கக்கோளாறு என குறிப்பிடலாம்.

நிறைய பேர் கொரோனாவிற்கு பிறகுதான் தங்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் வந்திருப்பதாக கூறி சிகிச்சைக்கு வருகிறார்கள். அதற்கு காரணம் கொரோனா காலங்களில் ஏற்பட்ட தூக்க மாற்றமாகக்கூட இருக்கலாம். கொரோனா காலங்களில் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்திருப்போம். பொழுதுபோக்கிற்காக நீண்ட நேரம் போன், டிவி என ஸ்கிரீன்களை பயன்படுத்தி இருப்போம். இவற்றால் நம்முடைய தூக்க நேரங்கள் மாறி இருக்கலாம். அதனால்கூட, இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இதுவொரு காரணம்.

கொரோனா
கொரோனா

அடுத்தக் காரணம், கொரோனாவால் அதிகம்பேர் பாதித்தபோது, நாம் உயிர்ப்பிழைப்போமா அல்லது இறந்துவிடுவோமா என்கிற பயம் நம் எல்லோருடைய மனங்களிலும் இருந்திருக்கும். சிலர், ஐ.சி.யூ. வரைகூட சென்று மீண்டு வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்ட மன அழுத்தம், பயம் போன்றவற்றால் இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். அப்போது குறைவுபட்ட நோயெதிர்ப்பு சக்தி காரணமாக, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதனால்கூட இந்த பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. தவிர, மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவாக (Hypoxia) இருந்தாலும்கூட தூக்கக்கோளாறும், Brain fog-ம் வர வாய்ப்பு உண்டு.

சீரான தூக்கமும், தினமும் உடற்பயிற்சி செய்வதும்தான் இவற்றுக்கான தீர்வே. தற்போது பலருக்கும் படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை. அதற்கான காரணம் அவர்களுடைய பழக்க வழக்கங்கள்தான். படுக்கையில் படுத்துக்கொண்டு 'இன்னும் தூக்கம் வரலையே' என்று அதைப்பற்றி சிந்தித்து அதையொரு கவலையாக்கிக்கொண்டு இருப்பார்கள். படுக்க சென்றவுடன் இந்த சிந்தனையை மறந்துவிட வேண்டும். எதையும் யோசிக்காமல் இருந்தாலே, படுத்தவுடன் நல்ல தூக்கம் வரும். தவிர, தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே உணவு உட்கொள்ள வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே செல்போன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இருட்டான அறையில் தூங்க வேண்டும். இப்படி சீரான தூக்கமும் தினமும் உடற்பயிற்சியும் இருந்தாலே போதுமானது. இந்த இரண்டு பிரச்னைகளில் இருந்து மீண்டு விடலாம்'' என்று தைரியம் தருகிறார் டாக்டர் பிரபாஷ்.

டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்.
டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...