சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய ஆரோக்கியப்பலன்கள் இருப்பதால் பெரியவர்களுக்கும் பீட்ரூட் பிடிக்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன; பீட்ரூட்டை சமைக்காமல் சாப்பிடலாமா; ஏ.பி.சி ஜூஸ் தினமும் அருந்தலாமா என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.
பீட்ரூட்டில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இதயம் சீராக செயல்பட உதவும். இதில் நைட்ரேட் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு இருப்பதால் அவை ரத்தக்குழாய்களை அமைதிப்படுத்தி ரத்தம் சீராக உடலில் பரவ உதவும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது.
எந்த வகை காயாக இருந்தாலும் அதனை வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக சத்துகள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால், பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டால் செரிமானப்பிரச்னைகள் ஏற்படும். பீட்ரூட்டை வேக வைத்து மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட்டில் இருக்கிற தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், பீட்ரூட் வேகவைத்த தண்ணீரில் கரைந்து விடும் என்பதால் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் அருந்த வேண்டும்.
தேவையில்லை. பீட்ரூட்டை மட்டுமே தினமும் எடுத்துக்கொண்டால் மீதமுள்ள காய்கறிகள் வழியே கிடைக்க வேண்டிய சத்துகள் உடலில் குறையத் தொடங்கிவிடும். இதனால் உடலில் சத்துக்களின் சமநிலையில் மாறுபாடு ஏற்பட்டு உடலில் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் எடுத்துக்கொண்டாலே போதும்.
செரிமானக்கோளாறு உள்ளவர்கள், சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது. இரும்புச்சத்துக்காக சாப்பிட வேண்டும் என்றால், டயட்டீஷியன் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பீட்ரூட்டுக்கு மாற்றாக கீரை, பெரிய நெல்லிக்காய் என்று சாப்பிடலாம்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றையும் சேர்த்து ஏபிசி ஜூஸ் செய்கிறார்கள் (Apple, Beetroot, Carrot - ABC).
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் முயற்சியில் இருப்பவர்கள், சருமம் பளபளப்பாக மாற விரும்புவர்கள் இந்த ஜூஸை தினமும் அருந்துகிறார்கள். இது ஊட்டச்சத்தை அதிகரிக்கும், சருமத்தை பளபளப்பாக்கும் என்பது உண்மைதான். ஆனால், எடைக்குறைப்புக்கு ஏ.பி.சி ஜூஸ் உதவாது. தவிர, இந்த ஜூஸில் இருக்கிற சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும் என்பதால், நீரிழிவு இருப்பவர்கள் ஏ.பி.சி ஜூஸ் அருந்தக்கூடாது. மற்றவர்கள் ஏ.பி.சி ஜூஸ் அருந்தலாம் என்றாலும், தினமும் தேவையில்லை. வாரத்துக்கு இரண்டு நாள் போதும். அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சுதான்.''
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MaperumSabaithanil
Comments
Post a Comment