இப்போதும் அதே உணவுகள்!
ஒரு பெண் பெரிய மனுஷியாகும்போது உளுத்தங்களி, நாட்டுக் கோழி முட்டை, சிவப்பரிசிப் புட்டு என்று சத்தாகக் கொடுத்து உடம்பைத் தேற்றுவதுபோல, மெனோபாஸ் நேரத்திலும் சத்தாக சாப்பிடக் கொடுத்து அவளை பராமரிக்க வேண்டும்.
ஹார்மோனின் ஆட்டம் மட்டுப்பட...
கார அரிசி மற்றும் உளுந்து உணவுகளுடன் வெண்டைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அத்திக்காய், கோவைக்காய் என்று நாட்டுக் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். ஹார்மோனின் ஆட்டம் கொஞ்சம் மட்டுப்படும்.
கை,கால் வீங்கினால்...
மெனோபாஸ் வருவதற்கு முன்பு கை, கால்கள் வீங்கும். இது மெனோபாஸ்க்கான ஒரு அறிகுறி. இதற்கு, சிறு சிறு குச்சிகளுடன் முருங்கைக்கீரை, சிறு கீரைத் தண்டு, கீரைத் தண்டு, வாழைத்தண்டு ஆகியவற்றை சூப்பாக செய்து குடித்தால், வீக்கங்களில் இருக்கிற நீர் வடியத் தொடங்கும்.
மாதம் ஒருமுறை அகத்திக்கீரை!
பசலைக்கீரை, மாதம் ஒருமுறை அகத்திக்கீரை, பிரண்டை என்று உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், குறைகிற கால்சியத்தை ஈடுகட்டும். முடக்கற்றான் கீரை கால் வலியைப் போக்கும்.
ஆவாரம் பூவும் முருங்கைப் பூவும்...
மெனோபாஸ் நேரத்தில் எலும்பு மஜ்ஜைகள் பலவீனமாகும். அதனால்தான், ரத்தவிருத்திக் குறைவது. இதற்கு துவர்ப்பு சுவையுள்ள வாழைப்பூ, அத்தி, விளாம்பழம், பொன்னாங்கண்ணி கீரைகள், நெல்லிக்காய், ஆவாரம் பூ மற்றும் முருங்கைப் பூ கூட்டு என்று சாப்பிடுங்கள்.
வெள்ளைப்படுதலும் தொற்றும்...
இந்த நேரத்தில் பிறப்புறுப்பு வறண்டு வெள்ளைப்படுதல், அரிப்பு, இன்ஃபெக்ஷன் என்று அவஸ்தைகள் வரும். இதற்கு ஆரக் கீரை, வெள்ளைக்கீரை சாப்பிடலாம். மார்க்கெட்டில் கிடைக்கவில்லை என்றால், கீரை விற்பவர்களிடம் கேளுங்கள்.
சிறுதானியங்கள்...
சிறுதானியங்கள் சாப்பிடலாம். நீரிழிவு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று சாப்பிட வேண்டும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras
Comments
Post a Comment