மருத்துவமனையில் மட்டும்...
கிருமி நாசினி திரவங்கள் ஆரம்ப காலத்தில் மருத்துவமனையில் சர்ஜரி நடக்கும் போது பயன்படுத்துவார்கள். அதன் பின்னர் வீட்டிலும் தரை துடைக்க, துவைத்த துணியில் கிருமி நீக்கம் செய்ய அதிகமாக பயன்படுத்தினர்.
முதலுதவிப் பெட்டியில்...
முதலுதவிப் பெட்டிகளில் கிருமிநாசினி திரவம் கட்டாயம் இருக்கும் என்பதால், காயம் பட்ட இடத்தில் இதை நேரடியாக பயன்படுத்துகின்றனர். ஆனால், அப்படி பயன்படுத்துவது தவறான ஒன்று. அதில் இருக்கிற கெமிக்கல் நேரடியாக நம்முடைய தோலில் படும்போது வறட்சி, கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். தோல் வெந்து போவதற்குகூட வாய்ப்பிருக்கிறது. இதனால், நம் தோலின் நிறம்கூட மாறி விடலாம்.
அலர்ஜி...
சிலருக்கு அலர்ஜிகூட ஏற்படலாம். ஏற்கெனவே தோல் அலர்ஜி இருப்பவர்களுக்கு இது இன்னமும் பிரச்னையை ஏற்படுத்தி விடும்.
நல்ல பாக்டீரியாக்களையும் கொல்லுமா?
கிருமிநாசினி திரவங்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமல்ல, சருமத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களையும் அழித்து விடும்.
கிருமிநாசினி திரவங்களால் ஏற்பட்ட காயங்களை சரி செய்ய முடியுமா?
கண்டிப்பாக முடியும். உடனடியாக மருத்துவரை சந்தித்தால் தோலில் பெரியளவுக்கு பிரச்னை ஏற்படாமல் சரி செய்துவிடலாம். எரிச்சல் ஏற்பட்ட பிறகும் மருத்துவரிடம் செல்லாமல், கைக்குக் கிடைத்த க்ரீம், மஞ்சள் தடவினால் காயம் பெரிதாகி விடும். என்றாலும் 90 சதவிகிதம் காயத்தைக் குணப்படுத்தி விடலாம். ஆனால், காயம் குணமாக காலம் எடுக்கும்.
எப்படி பயன்படுத்துவது?
கிருமிநாசினி திரவத்தை பாட்டிலில் உள்ள வழிமுறைகளின்படி நீருடன் கலந்த பின்னர்தான் பயன்படுத்த வேண்டும். தவிர, அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
Comments
Post a Comment