Skip to main content

கறவபபல: கச வளரசச கடடககள சரககர கலலரலககக கவல.. எததன பலனகள தரயம?!

கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை; ஆனால், அத்தகைய கறிவேப்பிலையை நாம் உண்ணாமல் ஒதுக்கி வைப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், நீர்மோர் சகலத்திலும் கறிவேப்பிலை இடம் பெற்றிருந்தாலும் உணவு உண்ணும் போது ஒதுக்கி வைக்கும் அளவுக்கு கறிவேப்பிலை என்றாலே பலருக்கும் கசக்கிறது.

`உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. அதனால் தான் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது என்பதே மருத்துவர்களின் வாதம். மணம் நிறைந்த, மகத்துவம் மிகுந்த கறிவேப்பிலையில் உள்ள சத்துகளையும், மருத்துவக் குணங்களையும் பார்க்கலாம்.

கறிவேப்பிலை

அட, இவ்வளவு சத்துகளா...

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது.

வயிற்றுக்கோளாறுகள் வராது...

கறிவேப்பிலையில் உள்ள கார்பாசோல் அல்கலாய்டு (Carbazole Alkaloids) வயிற்றுப்போக்கைத் தடுக்கக்கூடிய ஆன்டி- டயாரியல் (Anti-Diarrheal properties) பண்பைக் கொண்டுள்ளதாக்,அ பல ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இதனால், கறிவேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை மைய அரைத்துச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம்.

ஆயுர்வேதத்தில் இது, வயிற்றுக்கோளாறுகளை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஜூஸாக மிக்ஸியில் அடித்து, அதனுடன் எலுமிச்சைப்பழச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது அரைத்த கறிவேப்பிலையை மோருடன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது செரிமானத்தை அதிகரிப்பதுடன், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். அஜீரணம், பசியின்மையையும் போக்கும்.

நீரிழிவு

சர்க்கரைநோயாளிகளுக்கு வரப்பிரசாதம்!

கறிவேப்பிலை ஆன்டி - கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்டராலை ( LDL-low density lipoprotein) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்-ஐ (HDL - High Density Lipoprotien) உயர்த்த உதவுகிறது. கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், இது அனீமியா எனப்படும் ரத்தச்சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கல்லீரலின் காவலன்!

கறிவேப்பிலையில் லுகேமியா (Leukemia), புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தடுக்கும் பீனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) நிறைந்துள்ளன.

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் கல்லீரல் செல்கள் அழிவைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும். மேலும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். இது ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதைக் குறைப்பதால், ரத்தம் ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருக்கும்.

கல்லீரல்

கண் ஆரோக்கியம் காக்கும்

இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள் (Carotenoids) கார்னீயா பாதிப்பைக் கட்டுப்படுத்தும். பார்வை இழப்பு, மாலைக்கண் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

முடி வளர்ச்சிக்கு உதவும்

கறிவேப்பிலையை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி நன்றாக வளரும். கருமையாக வளரும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...