Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்குப் பெரும்பாலும் பத்திய உணவுகளைப் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்... மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் மோர் சாதம் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி மஞ்சள் காமாலை என்று நாம் தமிழில் ஒரே வார்த்தையில் சொல்கிறோம். உண்மையில் 'காமாலை' என்றால் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். பொதுவாக இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பாட்டின் மீது விருப்பம் இருக்காது. இந்த நோயும் அதையே பிரதிபலிக்கிறது. கல்லீரல் பாதிப்படையும்போது தோன்றும் முதல் அறிகுறியாக, பசியின்மை ஏற்படும். வாயில் கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வது, எதைப் பார்த்தாலும் பிடிக்காத உணர்வு, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிளும் தோன்றும். தவிர, ரத்தத்தில் பிலிருபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும்போது, உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதையும் சேர்த்துதான் இதற்கு மஞ்சள் காமாலை என்று பெயர் வந்தது. கல்லீரலின் செயல்பாடு மாறும்போது ஏற்படுகிற இ...