Skip to main content

Doctor Vikatan: வெயிட்லாஸ்... அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சமூக ஊடங்களில் உடல் எடையைக் குறைக்கும் வெயிட்லாஸ் மாத்திரைகள், மருந்துகள் பற்றிய செய்திகளை அதிகம் கேள்விப்படுகிறோம். மருத்துவ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் என்றும் சொல்கிறார்கள்.

அவற்றை மருத்துவ ஆலோசனையின்றி நாமாக வாங்கிப் பயன்படுத்தலாமா.... எவ்வளவு எடை குறையும்?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்
பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

இந்தியாவில் CDSCO (Central Drugs Standard Control Organisation) அமைப்பால் உடல் எடையைக் குறைக்க ஆர்லிஸ்டாட் (Orlistat),  செமாக்ளுடைடு (Semaglutide) மற்றும் டிர்ஸெபடைடு (Tirzepatide) என  இதுவரை மூன்று மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் ஆர்லிஸ்டாட் என்பது இந்தியாவில் 2007-ம் ஆண்டிலிருந்தே மாத்திரை வடிவில் பயன்பாட்டில் உள்ளது. செமாக்ளுடைடு மற்றும் டிர்செபடைடு (Tirzepatide) ஆகிய இரண்டும் கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

இந்த மருந்துகளின் செயல்திறன் (Efficacy) எப்படியிருக்கும் என்பது இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது உடல் எடை குறையும் விகிதம் எப்படியிருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். 

அந்த வகையில் ஆர்லிஸ்டாட் மருந்தை எடுக்கும்போது ஒரு வருடத்தில் ஒருவரின் மொத்த உடல் எடையில் 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 100 கிலோ எடையுள்ள ஒருவர் இந்த மருந்தைப் பயன்படுத்தினால், ஒரு வருடத்தில் 3 முதல் 10 கிலோ வரை எடை குறையலாம்.

செமாக்ளுடைடு மருந்தை எடுக்கும்போது மொத்த உடல் எடையில் சுமார் 15% முதல் 17% வரையிலும், டிர்செபடைடு மருந்தை எடுக்கும்போது சுமார் 22.5% வரையிலும் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. 

உடல் எடை அதிகமுள்ளவர்கள், எப்போதும் குறுக்கு வழிகளை நாடக்கூடாது. எடை அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

வெறும் மருந்துகள் மட்டுமே உடல் எடையை முழுமையாகக் குறைத்துவிடாது.

வெறும் மருந்துகள் மட்டுமே உடல் எடையை முழுமையாகக் குறைத்துவிடாது. மருந்துகளுடன் சேர்த்து வாழ்க்கைமுறை மாற்றங்கள் (Lifestyle Modifications) மிக அவசியமானவை. எடையைக் குறைக்க மட்டுமன்றி, அதைத் தக்கவைக்கவும் உடற்பயிற்சி, சரியான உறக்கம் மற்றும் உணவுமுறை மாற்றங்கள் ஆகியவை அடிப்படை. இந்த விஷயங்கள் பின்பற்றப்பட்டால்தான் இந்த மருந்துகளும் சிறப்பாகச் செயல்படும்.

மேற்குறிப்பிட்ட மூன்று மருந்துகளில், ஆர்லிஸ்டாட் என்பது இப்போது பெரிய அளவு உபயோகத்தில் இல்லை. இது செரிக்கப்படாத கொழுப்பை மலம் வழியாக வெளியேற்றுவதன் மூலம் செயல்படுகிறது. இன்று ஆர்லிஸ்டாட்டை விட அதிக பலன்கள் தரும் மருந்துகள் வந்துவிட்டதால், இந்த மருந்தைப் பெரும்பாலான மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை.

உடல் எடைக்குறைப்புக்கான மருந்துகளைக் கண்டது, கேட்டது, மற்றவர்களுக்குப் பலன் தந்ததன் அடிப்படையில் நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று, உங்கள் உடலை டெஸ்ட் செய்து பார்த்த பிறகு, அவரது பரிந்துரையின் பேரில்தான் எடுக்க வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...