Doctor Vikatan: கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மைக்ரோ க்ரீன் என்ற கான்செப்ட் டிரெண்டாகி வருகிறது. அதென்ன மைக்ரோ க்ரீன்ஸ்.... எதில் தயாரிக்கிறார்கள்... யாருக்கு நல்லது? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் மைக்ரோ கிரீன்ஸ் என்பவை காய்கறி அல்லது கீரை வகைகளின் மிக இளம்நிலை. அதாவது, செடிகள் வளரத் தொடங்கும் ஆரம்ப கட்டத்திலேயே, அவற்றின் இலைகள் மிகவும் மென்மையாகவும் லேசாகவும் இருக்கும்போதே நாம் அவற்றை அறுவடை செய்து பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் யாரும் இவற்றை சமைத்துச் சாப்பிடுவதில்லை. சாலட் அல்லது சூப் போன்றவற்றில் பச்சையாகச் சேர்த்துச் சாப்பிடலாம். மைக்ரோ கிரீன்ஸ் ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே ஆகியவை அதிக அளவில் உள்ளன. இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. பைட்டோ நியூட்ரியன்ட்ஸும் அதிகம். தவிர, இவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸை அதிகரிக்க உதவுகின்றன. மைக்ரோ கிரீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கெட்...