Skip to main content

Doctor Vikatan: Pregnancy Test-ல் ஆணுக்கு பாசிட்டிவ்... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: மனைவிக்காக வாங்கிய பிரெக்னன்சி கிட்டில், கணவன் தனது சிறுநீரை டெஸ்ட் செய்ததாகவும், அதில் அவருக்கு பிரெகன்சி பாசிட்டிவ் என்று வந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஆண்களுக்கும் பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வருமா... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரிதினும் அரிது. ஆர்வக்கோளாறில் இப்படி பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்க்கும் எல்லா ஆண்களுக்கும் பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வரவும் வாய்ப்பில்லை. ஆனால், அரிதினும் அரிதாக இப்படி வரும்போது, அதை அந்த ஆணுக்கான வார்னிங் சிக்னலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.

இந்த விஷயத்துக்குள் போவதற்கு முன், 'ஹோம் பிரெக்னன்சி கிட்' (Home pregnancy test kit ) எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். ஹெச்சிஜி (Human chorionic gonadotropin) என்ற ஹார்மோனை, சிறுநீரில் கண்டுபிடிப்பதுதான் பிரெக்னன்சி டெஸ்ட்.

பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஹார்மோனானது பிளாசன்ட்டா (Placenta) எனப்படும் நஞ்சுக்கொடியில் இருந்து உற்பத்தியாகிறது. கரு பதிந்ததும், பிளாசன்ட்டாவில் இருந்து ஹெச்சிஜி என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. அதனால்தான் பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வருகிறது. ஆனால், நம் உடலானது கர்ப்பத்தின்போது மட்டுமன்றி, வேறு சில சூழல்களிலும் இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யலாம்.

உதாரணத்துக்கு, ஆணுக்கு விந்துப்பையில் புற்றுநோய் (Testicular cancer) பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஹார்மோன் சுரக்கலாம். இதை 'ஜெர்ம் செல் டியூமர்ஸ்' (Germ cell tumors ) என்று சொல்வோம். இது ரத்தத்தில் நுழைவதால், சிறுநீரில் கலந்து பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று காட்டும்.

ஆணுக்கு விந்துப்பையில் புற்றுநோய் (Testicular cancer) பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஹார்மோன் சுரக்கலாம்.

இந்த வகைப் புற்றுநோய் செல்களும், ஆரம்பநிலை பிளாசென்ட்டல் செல்களைப் போல ஹெச்சிஜி ஹார்மோனை உற்பத்தி செய்யும். அதற்காக இந்த மாதிரி பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு, அந்த ரிசல்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு, ஓர் ஆணுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கவோ, உறுதிசெய்யவோ முடியுமா என்றால், நிச்சயம் முடியாது.

பிரெக்னன்சி டெஸ்ட்டை, புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான டெஸ்ட்டாக ஒருபோதும் நினைக்கவேகூடாது. டெஸ்டிகுலர் கேன்சரில் எல்லாமே இதுபோல ஹெச்சிஜியை உற்பத்தி செய்யாது. எனவே, ஒருவேளை புற்றுநோய் இருந்தும், பிரெக்னன்சி டெஸ்ட் கிட்டில் இந்த ஹார்மோன் இருப்பது தெரியவராமல் இருந்தால், மிகப்பெரிய ஆபத்து அலட்சியப்படுத்தப்படும்.

டெஸ்டிகுலர் கேன்சருக்கான அறிகுறிகளை ஆண்கள் கண்டறியத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு விரைப்பை அல்லது இரண்டு விரைப்பைகளில் வலியே இல்லாத சின்ன வீக்கம், கட்டி இருக்கலாம். விதைப்பையில் கனமான உணர்வு இருக்கலாம். அடிவயிற்றில் வலி, விரைப்பையில் நீர்கோத்துக்கொள்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவர் முதலில் உடல்ரீதியாகப் பரிசோதனை செய்து பார்ப்பார். பிறகு விரைப்பைக்கு அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யச் சொல்வார். பிறகு ரத்தப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். இவற்றை வைத்து, ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் இருந்தால் இன்னும் சில டெஸ்ட்டுகளைப் பரிந்துரைப்பார்.

மருத்துவர் முதலில் உடல்ரீதியாக பரிசோதனை செய்து பார்ப்பார். பிறகு விரைப்பைக்கு அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யச் சொல்வார்.

டெஸ்டிகுலர் கேன்சரைப் பொறுத்தவரை, ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால், அதைக் குணப்படுத்த வாய்ப்புகள் மிகமிக அதிகம். புற்றுநோய் பாதிப்பு என்பது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து கூடுதலாக சில சிகிச்சைகள் தேவைப்படலாம்.

விரைப்பைகளைச் சுய பரிசோதனை செய்து பார்ப்பதும், அசாதாரண அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவதும்தான் இதில் முக்கியம். மற்றபடி இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள், செய்திகளைப் பார்த்து விரைப்பை புற்றுநோயை விளையாட்டுத்தனமாக அணுக வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...