Skip to main content

Posts

Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு... நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?

Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கனவுகள் நிஜத்தில் நடக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனவே, கனவுகள் நிஜமாகிவிடுமோ என்ற பயம் தேவையற்றது. ஒரு கனவு மீண்டும் மீண்டும் வருகிறது என்றால், அதை உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடாகப் பார்க்கலாம்.  சிக்மண்ட் ஃப்ராய்டின் 'ட்ரீம் அனாலிசிஸ்'   பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் கனவுகளை அலசுவதை ஒரு கலை என்றே சொல்லலாம்.  கனவுகள் வருவதை கீழ்க்காணும் விதங்களில் புரிந்துகொள்ளலாம். கனவை உங்கள் ஆழ்மனதின் செய்தியாகப் பார்க்கலாம். அதாவது உங்கள் மனதில் இருக்கும் ஏதோ ஒரு கவலை, பயம் அல்லது ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு கனவாக வெளிப்படலாம். பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கனவுகளின் மூல...

Kerala: "மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காணச் செல்வோம்" - ஆலின் ஷெரினின் பெற்றோர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். பிறந்து 10 மாதங்களே ஆன ஆலின் ஷெரினுடன் ஷெரின் ஆன் ஜான் கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் உள்ளிட்டோர் திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். அதில், குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் மேல் சிகிச்சைக்காக கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் செய்ததில் மிகவும் வயது குறைந்தவர் ஆலின் ஷெரின் ஆபிரகாம் என முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். குழந்தையின் இறுதிச்சடங்கு நிறைவடைந்த நிலையில் ஒரே ம...

Doctor Vikatan: மருக்களை உதிரச் செய்யுமா அம்மான் பச்சரிசி?

Doctor Vikatan: என் நண்பனுக்கு கழுத்து, நெற்றிப் பகுதிகளில் மருக்கள் இருக்கின்றன. அம்மான் பச்சரியை அரைத்துத் தடவினால் மருக்கள் உதிர்ந்துவிடும் என ஒரு வீடியோவில் பார்த்தேன். அது உண்மையா.... மருக்களை நீக்க வேறு எளிய சிகிச்சைகள் உள்ளனவா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   மூலிகைமணி அபிராமி அம்மான் பச்சரிசியினால் மருக்கள் நீங்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் பயன்படுத்தினால் நீங்காது. அதேமாதிரி அதைப் பயன்படுத்தவெனச் சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம். அம்மான் பச்சரிசி என்பது ஒருவகை தாவரம். அதைக் கிள்ளினால் அதிலிருந்து ஒரு பால் வரும். அந்தப் பாலை மருவின் மீது தொடர்ந்து வைத்து வந்தால், அந்த மரு முதலில் லேசாக உலரத் தொடங்கும். அதன்பிறகு நமக்கே தெரியாமல் அந்த மரு கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்து உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது விழுவதுகூட நமக்குத் தெரியாது. எனவே, இந்த அம்மான் பச்சரிசி மருக்களை நீக்குவதற்குச் சிறப்பாகச் செயல்படும், ஆனால், அதைத் இடைவிடாமல் செய்ய வேண்டும் என...

கேரளா: "பொன்னு மோளே நீ சாக மாட்டாய்" - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின் ஆன் ஜான். ஷெரின் ஆன் ஜான் ஆசிரியையாக உள்ளார். இவர்களது ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். ஆலின் ஷெரின் ஆபிரகாம் பிறந்து 10 மாதமே ஆகிறது. ஷெரின் ஆன் ஜான் பட்டம் பெறும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கோட்டயத்துக்குச் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி காரில் வீடு திரும்பினர். அப்போது இவர்கள் பயணித்த கார் திடீரென மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயம் அடைந்தது. குழந்தையின் தாய் ஷெரின் ஆன் ஜான் மற்றும் குழந்தையின் தாய்வழி தாத்தா ராஜன் ஜான், பாட்டி ஜெசி ஜான் ஆகியோரும் காயம் அடைந்தனர். அனைவரும் திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது. குழந்தையின் தாய் உள்ளிட்டோர் திருவல்லா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு இடையே கடந்த 13-ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடை...